சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தள்ளியே நின்னு பேசுயா! குறவர் இன மக்களிடம் தீண்டாமை? அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் மீது போலீசில் புகார்

Google Oneindia Tamil News

சென்னை : தன்னைச் சந்திக்க வந்த குறவர் இன மக்களிடம் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் குறித்த பேச்சுகள்தான் தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் ஆக்கிரமித்து இருக்கிறது. பட்டியலிட மக்களை குறிப்பாக குறவர் இன மக்களையும் தனது கட்சி எம்பி ஒருவரையுமே அவர் அவமதித்ததாக சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறவர் என்ற எழுத்தின் பெயரை பிற சமூகத்தினரின் பெயரோடு இணைத்து பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையத்தில் வன வேங்கைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரனியன் என்பவர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

வர்ணாசிரம தர்மத்தின் மீது கோபப்படுங்கள்.. திமுக எம்பி ஆ ராசா மீது ஏன்?.. கே பாலகிருஷ்ணன் கேள்வி வர்ணாசிரம தர்மத்தின் மீது கோபப்படுங்கள்.. திமுக எம்பி ஆ ராசா மீது ஏன்?.. கே பாலகிருஷ்ணன் கேள்வி

சாத்தூர் ராமச்சந்திரன்

சாத்தூர் ராமச்சந்திரன்

இதைஅடுத்து தனது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களோடு கடந்த வாரம் தனது கட்சி நிர்வாகிகள் சிலருடன் சென்னையில் உள்ள அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இல்லத்தில் இரணியன் மனு கொடுக்க சென்றிருக்கிறார் அப்போது அவர்களை அமைச்சர் அவமரியாதை செய்தார் என்று கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அங்கு தென்காசி நாடாளுமன்ற தனி தொகுதி உறுப்பினரான தனுஷ் குமாரும் அவர்களோடு வந்திருக்கிறார் அப்போது அவரையும் அமைச்சர் அவமரியாதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

தீண்டாமை செயல்

தீண்டாமை செயல்

இந்த நிலைதான் வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறவர் சமுதாய மக்கள் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த புகாரில்," குறவர் சமுதாயத்திற்காக தமிழக அரசிடம் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தான் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது இது தொடர்பான மனு ஒன்றை கடந்த 23ஆம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வீட்டுக்கு கொண்டு சென்றேன்.

அலைக்கழிப்பு

அலைக்கழிப்பு

அப்போது அமைச்சர் வீட்டில் இல்லை என காவல் அதிகாரி கூறினார். தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக நாங்கள் காத்திருந்தோம் பிறகு நாங்கள் அவரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என கூறியதால் வீட்டிற்குள் இருந்த அமைச்சர் வெளியே வந்தார். அப்போது முதலமைச்சர் சந்திக்க நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டோம் அதற்கு முதலமைச்சர் என்ன பக்கத்தில் வீட்டில் இருக்கிறார் என அவர் கேலியாகக் கூறினார்.

ஒருமையில் பேச்சு

ஒருமையில் பேச்சு

நாங்கள் குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி தொடர்ந்து காலணிகளை கழற்றிவிட்டு வெளியே வாருங்கள் என்றதோடு நாங்கள் எடுத்துச் சென்ற சால்வையையும் அணிவிக்க அவர் அனுமதிக்கவில்லை. மேலும் கோரிக்கைகளை முழுவதுமாக படித்துப் பார்க்காமலேயே இதெல்லாம் ஒரு கோரிக்கையா என்று கேட்டார். அங்கு நாற்காலிகள் இருந்த போதும் எங்களை உட்காரச் சொல்லாமல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேசியதோடு, தள்ளி நில்லுங்க என ஒருமையில் பேசினார் எனக் கூறியிருக்கிறார்.

டிஜிபியிடம் புகார்

டிஜிபியிடம் புகார்

எங்களின் சாதியை காரணம் காட்டி தீண்டாமை செயலில் ஈடுபட்ட கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் இரணியன் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A complaint has been filed in the Tamil Nadu DGP office that Tamil Nadu Revenue Minister KKSSR Ramachandran was involved in untouchability with the Kurwar people who came to meet him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X