சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 குற்றச்சாட்டு அடங்கிய "சார்ஜ் சீட்".. மோடியின் 7 ஆண்டு ஆட்சியை கடுமையாக விமர்சித்த காங்.. அறிக்கை!

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் 7 ஆண்டு ஆட்சியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தற்போது இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. மொத்தம் 7 வருடங்கள் ஆட்சியை நிறைவு செய்துள்ள பாஜக கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கை காரணமாக கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Congress releases a charge sheet with 7 points criticizing 7 years of Modi government

7 வருடங்களில் மிக அதிகமான விமர்சனத்தை பாஜக இப்போது சந்தித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா பாஜக தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இன்று ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரன்தீப் சுர்ஜ்வாலா பாஜக கட்சிக்கு எதிராக காங்கிரஸ் சார்பாக உருவாக்கப்பட்ட 7 புள்ளிகள் அடங்கிய "சார்ஜ் ஷீட்" ஒன்றை வெளியிட்டார்.

இந்தியாவின் பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு, கொரோனா கேஸ்கள் அதிகரிப்பு, விவசாயிகள் போராட்டம், சீனா ஆக்கிமிரப்பு என்று மத்திய பாஜக அரசு சொதப்பிய 7 முக்கியமான விஷயங்களை அவர் பட்டியலிட்டு உள்ளார்.

 கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்: பிரதமர் மோடி கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்: பிரதமர் மோடி

1. அதன்படி மத்தியில் 2014ல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஜிடிபி 8.1% ஆக இருந்தது. ஆனால் கொரோனாவிற்கு முன்பே ஜிடிபியை பாஜக அரசு 4.2% ஆக சரித்துவிட்டது. அதன்பன் 2020-2021 முதல் காலாண்டில் ஜிடிபி - 24.1% ஆனது. இரண்டாம் காலாண்டிடில் இது -7.5% ஆனது. 2020-2021ல் இது முழுமையாக -8 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. இந்தியாவில் வேலைவாய்ப்புயின்மை மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. 45 வருடங்களில் இல்லாத மிக மோசமான சரிவை இந்தியா வேலைவாய்ப்பு துறையில் சந்தித்துள்ளது.

3. பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு லிட்டர் விற்கிறது, கடுகு எண்ணெய் 200 ரூபாய்க்கு லிட்டர் விற்கிறது. எல்பிஜி சிலிண்டர் விலை 809 ரூபாய்க்கு விர்ப்பிக்கிறது. விலைவாசி கடும் உயர்வை சந்தித்துள்ளது.

4. விவசாயிகளை பாஜக அரசு மசமாக் நடடத்துகிறது. தவறான சட்டங்கள் மூலம் அவர்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டு வேளாண் சட்டங்களை பாஜக திரும்ப பெற வேண்டும்.

5. ஏழை, எளிய மக்களுக்கு எதிரான அரசு இது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 27 கோடி மக்கள் இந்தியாவில் வறுமை கோட்டை தாண்டியதாக உலக வங்கி தெரிவித்தது. ஆனால் PEW Research Centre அறிக்கையின்படி இந்தியாவில் பாஜக ஆட்சியின் கீழ் 3.20 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர்.

6. இந்தியாவில் கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. கொரோனா மரணங்களை மத்திய அரசு மறைகிறது. வேக்சின் கொடுப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது. இந்தியாவிலேயே வேக்சின் இல்லாத போது 6.63 கோடி வேக்சின்களை மத்திய அரசு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது ஏன்?

7. மோடி அரசு தன்னை வலிமையான அரசு என்று காட்டிக்கொள்கிறது. ஆனால் சீனாவை அவர்களால் தட்டிக்கேட்க முடியவில்லை. லடாக்கில், அருணாசலப்பிரதேசத்தில் சீனா செய்யும் ஆக்கிரமிப்பை பாஜக அரசால் தட்டிக்கேட்க முடியவில்லை என்று காங்கிரஸ் சார்பாக உருவாக்கப்பட்ட சார்ஜ் ஷீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Congress releases a charge sheet with 7 points criticizing 7 years of PM Modi's BJP government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X