என் புருஷன் தான்.. லிப் லாக் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா! வாய் திறக்காத மாதம்பட்டி ரங்கராஜ்!
சென்னை: 'குக் வித் கோமாளி' புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் தான் திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி பரப்பரப்பை கிளப்பி இருக்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா. முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்ததாக பரபரப்பு கிளம்பிய நிலையில், ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஜாய் கிரிசில்டா. அந்த வீடியோவை எடிட் செய்ததே மாதம்பட்டி ரங்கராஜ் தான் எனவும் பதிவிட்டுள்ளார்.
கோவையைச் சேர்ந்தவர் பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ். கோவை மட்டுமல்லாது இந்தியா முழுவதும் முக்கிய பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் சமையல் ஆர்டர் எடுத்து செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் செய்து அசத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி அவரது சமையலை பார்த்து புகழ்ந்ததாக கூறியிருந்தார். தொடர்ந்து பல்வேறு யூட்யூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வந்த அவர் விஜய் டிவியில் கால் எடுத்து வைத்தார். விஜய் டிவியில் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

மாதம்பட்டி ரங்கராஜ்
அதற்கு முன் மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்திலும் மாதம்பட்டி ரங்கராஜ் நாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து பிரபலமான அவர் நடிகர்கள், அரசியல் பிரபலங்களின் இல்ல திருமண விழாக்கள், அரசியல் மாநாடுகள் என பிரம்மாண்ட விருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்து வந்தார். அதே நேரத்தில் சமையலை விட சமூக வலைதளங்களில் தான் மிகவும் ஆக்டிவாக இருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். இதற்கிடையே கடந்த சில தினங்களாகவே அவரது தனிப்பட்ட விவகாரங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
ஜாய் கிரிசில்டா
தனது முதல் மனைவியை ரங்கராஜ் விவாகரத்து செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது முதல் மனைவியோ, மாதம்பட்டி ரங்கராஜோ, அதனை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் தான் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்தார். அதனை தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்வது போல் போட்டோ போட்டிருந்தார் ஜாய் கிரிசில்டா. திருமண கோலத்தில் கோவிலில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள ஜோய் கிரிசில்டா "பேபி லோடிங் 2025.. கர்ப்பமாக இருக்கிறேன்.. ஆறு மாதம் கர்ப்பம்" என பதிவிட்டு இருக்கிறார்.
ஜாய் கிரிசில்டா கர்ப்பம்
இதன் மூலம் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து வந்த செய்திகள் உறுதியானது. திருமணத்துக்கு முன்பே ஜாய் கிரிசில்டா கர்ப்பமானதாகவும் அதன் காரணமாகவே இந்த திருமணம் அவசர அவசரமாக மிக எளிமையாக நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், பல நாட்களுக்கு முன்பே ஜோய் கிரிசில்டாக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், தற்போது இருவருக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில்தான் பழைய புகைப்படங்களை ஜோய் கிரிசில்டா வெளியிட்டு இருக்கிறார் எனவும் சொல்லப்பட்டது.
❤️ edited by husband @MadhampattyRR #madhampattyrangaraj pic.twitter.com/KzUj0ieVw2
— Joy Crizildaa (@joy_stylist) August 19, 2025
இரண்டாவது திருமணம்
மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் இரண்டாவது திருமணம் செய்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. மேலும் அவரது முதல் மனைவி வழக்கறிஞர் என்ற நிலையில் அவர் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே திடீரென பொது நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் மனைவியுடன் கலந்து கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ். இதனால் அவர் முதல் மனைவியுடன் இருக்கிறாரா? அல்லது இரண்டாவது மனைவியுடன் இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்தது.
கிரிசில்டா வீடியோ
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ஜாய் கிரிசில்டா. அதில் இந்த வீடியோவை எடிட் செய்தது எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என கூறியுள்ளதோடு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தான் கர்ப்பமாக இருப்பது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மருத்துவ பரிசோதனை புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் இதுவரை ரங்கராஜ் இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காதது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications