சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்றுடன் 13வது நாள்... தமிழகத்தில் நடந்த பாசிட்டிவ் மாற்றம்..அதிரடியாக சரிந்த கொரோனா..இன்றைய நிலவரம்

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று 24,405 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 13வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. 36 ஆயிரம் என்கிற நிலையில் இருந்து 24ஆயிரம் என்கிற நிலையில் தமிழகம் எட்டியுள்ளது. இன்னமும் 4 நாட்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு உள்ளதால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுவதால் தொற்று பாதிப்பு இம்மாதத்திலேயே முழுமையாக சரிந்துஇயல்பு நிலை திரும்ப வாய்ப்பு உள்ளது.

பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவுமா? தாய்ப்பால் கொடுக்கலாமா? முழு தகவல்பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா பரவுமா? தாய்ப்பால் கொடுக்கலாமா? முழு தகவல்

கொரோனா பாதிப்பு வழக்கம் போல் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தான் அதிகமாக உள்ளது. எனினும் நேற்றைக்கு ஒப்பிடும் இன்று கணிசமாக குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஜூன் 2ம் தேதியான இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 24,405 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,72,751 ஆக

குறையும் நோயாளிகள்

குறையும் நோயாளிகள்

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று மட்டும் 32,221 பேர் மீண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை இரண்டு அலையிலும் சேர்த்து மீண்டவர்களின் எண்ணிக்கை 18,66,660 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2,80,426 ஆக குறைந்துள்ளது. முன்னதாக நேற்று இந்த எண்ணிக்கை 2,88,702 ஆக இருந்தது. ஒரே நாளில் இந்த எண்ணிக்கை சுமார் 8 ஆயிரம் அளவிற்கு குறைந்துள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

தொற்று குறைந்த போதிலும் உயிரிழப்பு பெரிய அளவில் குறையவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 463 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 68 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் 48 பேரும், செங்கல்பட்டில் 47 பேரும், சேலத்தில் 33 பேரும், வேலூர், திருவள்ளூரில் தலா 17 பேர் பலியாகி உள்ளனர்.

கோவை முதலிடம்

கோவை முதலிடம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் மாவட்ட நிலவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2980 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் பாதிப்பு நீண்ட நாளைக்கு பின் 3 ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது. கோவைக்கு அடுத்தபடியாக சென்னையில் 2062 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஈரோட்டில் 1671 பேருக்கும், திருப்பூரில் 1264 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 1253 பேருக்கும், தஞ்சாவூரில் 1020 பேருக்கும், செங்கல்பட்டில் 983 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

English summary
The incidence of corona is rapidly declining in Tamil Nadu due to curfew. Corona has been confirmed for 25,317 people in Tamil Nadu today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X