எவரெஸ்ட் சிகரம் போல உயரும் கொரோனா - எச்சரிக்கும் மா.சுப்ரமணியன்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எவரெஸ்ட் சிகரம் போல உயர்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: எவரெஸ்ட் சிகரம் போல கொரோனா பரவுவதால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் இரண்டும் ஒன்று சேர்ந்து மூன்றாம் அலையாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000 பேரை கடந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 8,981 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,76,413 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இன்று 18வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் 200 வார்டுகளில் 1600 முகாம்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், எவரெஸ்ட் சிகரம் போல கொரோனா பரவுவதால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் தடுப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் இல்லை என்று கூறினார்.

ஒவ்வொரு பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார். 33 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டி இருந்தது . அதில் 21 லட்சம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் டோஸ் 92% செலுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 71சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வருகிற 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 35,46,000 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
-
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications