சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழகம் தயார்.. 51 இடங்களில் பாதுகாப்பு மையம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் நாள் தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் வருகைக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

corona vaccine protection centers are ready in 51 places in Tamil Nadu

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதால், அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர்களுக்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில் 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் நோய் விலகி விட்டது என்று எண்ணி அலட்சியம் கொள்ளாமல், கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்டவைகளை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்.. 1,312 பேருக்கு பாதிப்பு! எங்கெல்லாம் பாதிப்பு அதிகம்! தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்.. 1,312 பேருக்கு பாதிப்பு! எங்கெல்லாம் பாதிப்பு அதிகம்!

தமிழகம் முழுவதும் 51 இடங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கான பாதுகாப்புடன் சேமித்து வைக்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசு தடுப்பூசி வினியோகித்தல் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மத்திய அரசு அறிவித்ததும் தமிழகத்தில் எவ்வாறு வினியோகிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம். ஆனால் வினியோக கட்டமைப்பை இப்போதே தயார் நிலையில் வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Health Secretary Dr. J. Radhakrishnan said that corona vaccine protection centers are ready in 51 places in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X