சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலில் யாருக்கு வந்தது? எப்படி பரவியது? சென்னையில் மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா.. சிக்கல்!

சென்னையில் இன்று புதிதாக 10 செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு செய்தியாளர்கள் இடையே பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று புதிதாக 10 செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு செய்தியாளர்கள் இடையே பதற்றம் ஏற்பட தொடங்கி உள்ளது.

Recommended Video

    சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா

    சென்னையில்தான் தமிழகத்தில் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 55 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது.

    சென்னையில் ஏற்கனவே 8 மருத்துவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் போலீசார் 3 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி முக்கியமான பணிகளை கவனித்து வரும் பலர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா வுகான் லேபிலிருந்து பரவவில்லை.. அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் WHO-வின் விளக்கம் கொரோனா வுகான் லேபிலிருந்து பரவவில்லை.. அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் WHO-வின் விளக்கம்

    செய்தியாளர்கள் எப்படி

    செய்தியாளர்கள் எப்படி

    போலீசார் மற்றும் மருத்துவர்களை போல தற்போது செய்தியாளர்களும் கொரோனா காரணமாக தமிழகத்தில் பாதிக்க தொடங்கி உள்ளனர். சென்னையில் நேற்று மட்டும் 27 செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னையை சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் பலருக்கு கொரோனா ஏற்பட்டதால் மொத்தமாக அங்கு ஒளிபரப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    மொத்தமாக சோதனை

    மொத்தமாக சோதனை

    மொத்தமாக சேனலில் எல்லோருக்கும் சோதனை செய்த பின்தான் மீண்டும் லைவ் ஒளிபரப்பு தொடங்கும் என்று கூறுகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அந்த சேனலில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் இன்னொரு சேனலில் சில நாட்களுக்கு முன் பணியில் சேர்ந்து இருக்கிறார். அவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த சேனலிலும் விரைவில் சோதனைகள் செய்யப்படும் என்று கூறுகிறார்கள். சென்னையில் மொத்தமாக 310 செய்தியாளர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

    மொத்தமாக எவ்வளவு

    மொத்தமாக எவ்வளவு

    இந்த நிலையில்தான இன்று கூடுதலாக 10 செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் எல்லோரும் வேறு வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்தவர்கள். கொரோனா பாதிக்கப்பட்ட சக செய்தியாளர்களை தொடர்பு கொண்டதன் மூலம் இவர்களுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சில சந்தேகம்

    சில சந்தேகம்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட முதல் இரண்டு செய்தியாளர்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்றே தெரியாது. இவர்கள் எப்படி கொரோனா மூலம் பாதிக்கப்பட்டார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. இவர்களுக்கு எந்த விதமான கொரோனா நோயாளிகளுடனும் தொடர்பு இல்லை. ஆனாலும் இவர்களுக்கு கொரோனா வந்துள்ளது.

     மிக மோசமான நிலை

    மிக மோசமான நிலை

    இப்படி கொரோனா பாதித்த சிலர் சென்னையில் சுகாதாரத்துறை சார்பாக தினமும் கொடுக்கப்படும் செய்தியாளர் சந்திப்பிலும் கூட கலந்து கொண்டு உள்ளனர். இதுதான் இன்னும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சுகாதாரத்துறை சார்பாக பேட்டி கொடுக்கப்படும் இடத்தில் அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வந்தது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் இப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் பழகிய இன்னோர் செய்தியாளர் தன்னுடைய சொந்த ஊருக்கும் கிளம்பி சென்றுள்ளார்.

    அவருக்கும் தீவிரம்

    அவருக்கும் தீவிரம்

    அவருக்கும் தீவிரமாக கொரோனா சோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எந்த காண்டாக்ட் மூலம் கொரோனா பரவியது என்பதை கண்டுபிடிக்க தீவிரமான விசாரணைகள் நடந்து வருகிறது. பகல் இரவு பார்க்காமல் கொரோனா குறித்த செய்திகளை உயிரை பணயம் வைத்து செய்தியாளர்கள் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களே இப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Coronavirus: 10 more journos got the infection in Chennai, Major setback in Contact tracing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X