சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே நாளில் 23 கொரோனா பலி.. அதிர்ச்சி அளித்த அந்த 10 பேரின் மரணம்.. தமிழகத்தில் தொடரும் சோகம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 23 பேர் பலியான நிலையில் அதில் 10 பேரின் மரணம் பெரிய அளவில் அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் கேஸ்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கேஸ்கள் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 1875 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38716 ஆக உயர்ந்து இருக்கிறது.

ஷாக்கிங் டேட்டா.. தென்னிந்தியாவின் கொரோனா எபிசென்டராக மாறும் சென்னை.. பரிதாபகரமான நிலையில் தலைநகர்!ஷாக்கிங் டேட்டா.. தென்னிந்தியாவின் கொரோனா எபிசென்டராக மாறும் சென்னை.. பரிதாபகரமான நிலையில் தலைநகர்!

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று அதிகமாக 23 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 349 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதே நிலைமை நீடித்தால் தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் மிக மோசமாக மாறும் என்று கூறுகிறார்கள். தினசரி பலி எண்ணிக்கை 20க்கும் அதிகமாக செல்கிறது. மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தியாக மாறியுள்ளது.

மோசமான நிலை

மோசமான நிலை

அதிலும் தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 23 பேர் பலியான நிலையில் அதில் 10 பேரின் மரணம் பெரிய அளவில் அதிர்ச்சி அளித்து இருக்கிறது. தமிழகத்தில் தொடக்க காலத்தில் 60+ வயது கொண்ட நபர்கள் மட்டுமே அதிகமாக பலியாகி வந்தனர். ஒரு நாளில் 10 பேர் பலியானால் அதில் 9 பேர் 60+ வயது கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் தற்போது நிலைமை மாறி இருக்கிறது. தமிழகத்தில் இளைஞர்களும் அதிகமாக பலியாகி வருகிறார்கள்.

கைமீறும் நிலைமை

கைமீறும் நிலைமை

அதன்படி தமிழகத்தில் தற்போது 60 வயதுக்கும் குறைவான நபர்கள் அதிகமாக பலியாக தொடங்கி உள்ளனர். தினமும் பலியாகும் நபர்களில் 5+ பேர் 60 வயதுக்கும் குறைவான நபர்களாக இருக்கிறார்கள். அதிலும் மோசமாக தமிழகத்தில் இன்று 23 பேரில் 10 பேர் 60 வயதுக்கும் குறைவானவர்கள். ஒரே நாளில் இப்படி 60 வயதுக்கும் குறைவான நபர்கள் தமிழகத்தில் இப்படி பலியாவது இதுதான் முதல்முறை.

40 வயதுதான் ஆகிறது

40 வயதுதான் ஆகிறது

அதிலும் இன்று பலியான நபர்களில் 4 பேர் 40-50 வயதுக்கும் இடைப்பட்ட வயது கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இரண்டு 40 வயது நபர்களுக்கு உடலில் கொரோனாவை தவிர ஒரு எந்த விதமான நோய்களும் இல்லை. ஆனாலும் இவர்கள் கொரோனா காரணமாக பலியாகி இருக்கிறார்கள். பொதுவாக தமிழகத்தில் பலியாகும் 84% பேருக்கு எதாவது நோய் இருந்துள்ளது.

கோமார்பரிட்டி பிரச்சனை

கோமார்பரிட்டி பிரச்சனை

அதாவது கோமார்பரிட்டி எனப்படும் இதய பிரச்சனை, வயோதிகம், பிற நோய்கள் உள்ளது . கோமார்பரிட்டி இல்லாத 16% பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் தமிழகத்தில் சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்ஷன் அதிகம் இருக்கும் நபர்கள்தான் அதிகம் பலியாகிறார்கள். ரத்த கொதிப்பு இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் ஆகும். ஆனால் தற்போது அப்படி எந்த நோயும் இல்லாதவர்களும் கொரோனாவிற்கு பலியாகி வருகிறார்கள்.

English summary
Coronavirus: 10 People below 60 years old died in Tamilnadu today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X