மாஸ்க் போடாமல் சுற்றிய மக்கள்.. காரிலிருந்து பட்டென இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. அடுத்து செம காரியம்!
சென்னை: சென்னை அண்ணாசாலையில் மாஸ்க் போடாமல் சென்று கொண்டு இருந்த பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Recommended Video
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் காரணமாக கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டுவிட்டதாக ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார். இதனால் மக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும், சமூக இடைவெளி விட வேண்டும் என்று கண்டிப்பாக குறிப்பிட்டு இருந்தார்.
சென்னையில் 40 சதவிகிதம் பேர்தான் மாஸ்க் அணிந்து உள்ளனர். வேறு யாரும் மாஸ்க் அணிவது இல்லை. மாஸ்க் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று முன்பே சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் சென்னையில் இதற்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். வார்டுக்கு 100 பேர் வீதம் ஒவ்வொரு வார்டுக்கும் ஆட்கள் களமிறக்கப்பட்டு மாஸ்க் அணியாத நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாஸ்க் மட்டுமே கொரோனா பரவலை தடுக்கும். ஓமிக்ரான் தீவிரத்தை மாஸ்க் மட்டுமே குறைக்கும் என்று அரசு சார்பாக தீவிரமாக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அபராதம்
இந்த நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல், கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்கள் மீது இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்றும் கண்காணிப்பின் போது பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.2.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வாங்கியதன் மூலம் இவ்வளவு தொகை திரட்டப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சென்னையில் மொஅபராதம்த்தம் 2,603 பேரிடமிருந்து ரூ.5.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு அபராதம்
ஒவ்வொருவரிடமும் தலா 200 ரூபாய் அபராதம் வாங்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்று சென்னையில் முககவசம் அணியாத மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முககவசங்களை வழங்கினார். அண்ணா சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது முதல்வர் ஸ்டாலின் சாலையில் இறங்கி மாஸ்க் வழங்கினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உடன் இருந்தார். கையில் மாஸ்க் பாக்ஸ் ஒன்றை வைத்துக்கொண்டு முதல்வர் எல்லோருக்கும் மாஸ்க் வழங்கினார்.

கண்டிப்பு
மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு அருகில் சென்று.. இப்படி வெளியே வர கூடாது. இது பாதுகாப்பு இல்லை. கொரோனா விதிகளை கடைபிடியுங்கள் என்று கூறினார். அதோடு தனது கையால் அவர்களுக்கு மாஸ்க் அணிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வரின் இந்த செயல் அங்கிருந்த மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தியது. முதல்வர் இப்படி மக்களுக்கு மாஸ்க் அணிவித்து வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications