சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

12 மாவட்டங்களில் மட்டும் ஏன் லாக்டவுன்.. 25 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி.. இதுதான் காரணம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 25 மாவட்டங்களில் மட்டும் லாக்டவுன் தளர்வு ஏன் அறிவிக்கப்பட்டது? 12 மாவட்டங்களில் ஏன் தளர்வு இல்லை? இந்த மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி? என்ற விவரம் வெளியாகி உள்ளது.

Recommended Video

    Lockdown 4.0 : யாருக்கு என்ன தளர்வு... முழு தகவல்

    தமிழகத்தில் வரும் மே 31ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று லாக்டவுன் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 25 மாவட்டங்களில் தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் சென்னை, விழுப்புரம் உட்பட 12 மாவட்டங்களில் லாக்டவுன் தொடரும், எந்த விதமான தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் தற்போது 10585 கொரோனா கேஸ்கள் உள்ளது. 6970 ஆக்டிவ் கேஸ்கள் தமிழகத்தில் உள்ளது.

    சென்னையில் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளாக 46 இடங்கள் அறிவிப்பு.. இன்று முதல் அமல்!சென்னையில் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளாக 46 இடங்கள் அறிவிப்பு.. இன்று முதல் அமல்!

     லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

    லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

    பின் வரும் 25 மாவட்டங்களில் தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்ட்டுள்ளது.

    தளர்வுகள் இல்லாத மாவட்டங்கள் என்ன

    தளர்வுகள் இல்லாத மாவட்டங்கள் என்ன

    அதே சமயம் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. அங்கு எப்போதும் போல லாக்டவுன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் , கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் தற்போதுள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் லாக்டவுன் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    என்ன குழப்பம்

    என்ன குழப்பம்

    இந்த மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது எப்படி என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் லாக்டவுன் விலக்கு இருக்கும் சில மாவட்டங்களில் அதிக கேஸ்கள் உள்ளது. திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் 119 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது. ஆனால் அங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ராணிப்பேட்டையில் வெறும் 39 ஆக்டிவ் கேஸ்கள்தான் உள்ளது. ஆனால் அங்கு எப்போதும் போல கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரிக்கப்பட்டது எப்படி

    பிரிக்கப்பட்டது எப்படி

    இந்த நிலையில் இந்த மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டது எப்படி என்று விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தை நான்கு மண்டலமாக பிரித்து லாக்டவுன் தளர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வடக்கும் தமிழகம் முழுக்க லாக்டவுன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அரியலூருக்கு மேலே சென்னை வரை இருக்கும் மாவட்டங்கள் அனைத்திலும் லாக்டவுன் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 மாவட்டங்களும் இந்த வடக்கு தமிழகம் என்ற மண்டலத்திற்கு கீழே வருகிறது.

    போக்குவரத்து காரணம்

    போக்குவரத்து காரணம்

    இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதன்படி வடக்கு மாவட்டங்களில் எங்காவது லாக்டவுன் தளர்வை கொண்டு வந்தால் அங்கு பேருந்து போக்குவரத்தை கொண்டு வர வேண்டும். இதனால் மற்ற வடக்கு மாவட்டங்கள் பாதிக்கப்படும். வடக்கு மாவட்டம் முழுக்க மொத்தமாக லாக்டவுன் இருந்தால் மட்டுமே போக்குவரத்து தொடங்கி அனைத்திலும் கட்டுப்பாடுகளை பின்பற்ற முடியும். ஒரே ஒரு மாவட்டத்தில் மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்பு இல்லை.

    சென்னைதான் காரணம்

    சென்னைதான் காரணம்

    இதற்கு முக்கிய காரணம் சென்னைதான் என்கிறார்கள். சென்னையில் இருந்து இந்த மாவட்டங்களுக்கு பலர் சென்று இருக்கிறார்கள். சென்னைக்கு அருகே இருக்கும் இந்த மாவட்டங்களில்தான் கோயம்பேடு கிளஸ்டர் ஏற்பட்டுள்ளது. இந்த கோயம்பேடு கிளஸ்டர் காரணமாக இந்த வடக்கு மாவட்டங்களில் மேலும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதனால்தான் இந்த 12 மாவட்டங்களில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கேஸ்கள்

    கேஸ்கள்

    அதேபோல் கொரோனா கேஸ்கள் அதிகமாக இருக்கும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கெல்லாம் ஏன் கட்டுப்பாடு இல்லை என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் கேஸ்கள் வெளிமாநிலத்தில் இருந்து சமீபமாக வந்த நபர்கள் மூலம் ஏற்பட்ட கேஸ்கள். இவர்கள் எல்லையிலேயே தடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர்.

    மேலும் பரவாது

    மேலும் பரவாது

    பலர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள். இவர்கள் எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு புதிதாக வந்த கொரோனா கேஸ்கள் மூலம் மேலும் பலருக்கு கொரோனா பரவ வாய்ப்பு இல்லை. அங்கு புதிய கிளஸ்டர் பரவ வாய்ப்பு இல்லை. அதேபோல் இங்கெல்லாம் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கேஸ்கள் பரவவில்லை. இதனால் இந்த மாவட்டங்களில் கேஸ்கள் அதிகம் இருந்தாலும் கூட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.

    English summary
    Coronavirus: On What basis lockdown eased down in 25 districts in Tamilnadu today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X