சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்த மாநிலமும் கற்பனை செய்ய முடியாத வேகம்.. கொரோனாவிற்கு எதிராக தமிழகம் சர்ஜிக்கல் ஸ்டிரைக்..பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக யாருமே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஒரு பக்கம் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 6472 கேஸ்கள் ஒரே நாளில் வந்துள்ளது. இதனால் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 192964 என்று உயர்ந்துள்ளது.

இன்னொரு பக்கம் சென்னையில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 90900 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 1336 ஆக உயர்ந்து இருக்கிறது.

கர்நாடகாவில் ரூ. 2,000 கோடிக்கு ஊழல்...பாஜக அரசு மீது காங்கிரஸ் எழுப்பும் புதிய பூதம்...!! கர்நாடகாவில் ரூ. 2,000 கோடிக்கு ஊழல்...பாஜக அரசு மீது காங்கிரஸ் எழுப்பும் புதிய பூதம்...!!

தமிழகம் என்ன திட்டம்

தமிழகம் என்ன திட்டம்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தமிழகத்தில் தினமும் கொரோனா சோதனைகள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு சோதனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று மட்டும் தமிழகத்தில் 62112 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் செய்யப்பட்டதில் இதுதான் மிக அதிக சோதனை ஆகும்.

இப்போது என்ன நிலை

இப்போது என்ன நிலை

அதேபோல் நேற்று தமிழகத்தில் 60375 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 2157689 மாதிரிகளை இதுவரை தமிழகத்தில் சோதனை செய்துள்ளனர். 2075522 பேருக்கு இதுவரை தமிழகத்தில் மொத்தமாக கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகமாக கொரோனா சோதனைகள் செய்யப்பட்டடுள்ளது.

மற்ற மாநிலங்கள்

மற்ற மாநிலங்கள்

தமிழகம் உத்தம 21 லட்சம் சோதனைகளை செய்துள்ளது. மற்ற மாநிலங்கள் தமிழகத்தின் இந்த டெஸ்டிங் சாதனையை எட்ட வேண்டும் என்றால், இன்னும் பல நாட்களுக்கு தீவிரமாக டெஸ்டிங் செய்ய வேண்டும்.

  • மகாராஷ்டிரா -17 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.
  • டெல்லி -8 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.
  • கேரளா -17 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.
  • கர்நாடகா -11 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.
  • குஜராத் -5 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.
  • உத்தர பிரதேசம் - 17 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர்.
  • ஆந்திர பிரதேசம் -15 லட்சம் சோதனைகளை செய்துள்ளனர். தமிழகம் எல்லா மாநிலங்களையும் விட மிக வேகமாக சோதனைகளை செய்து வருகிறது.
எப்படி சாத்தியமானது

எப்படி சாத்தியமானது

தமிழகத்தில் இப்படி டெஸ்டிங் மிக அதிகமாக செய்யப்படுவதற்கு காரணம், டெஸ்டிங் சென்டர்தான். இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக டெஸ்டிங் செண்டர் உள்ளது. தமிழகத்தில் 113 டெஸ்டிங் செண்டர்கள் உள்ளது. வேறு எங்கும் 100க்கும் அதிகமான சோதனை மையங்கள் இல்லை. இதுவும் கூட கொரோனாவிற்கு எதிராக தமிழகம் இவ்வள்வு வேகமாக சோதனைகளை செய்ய முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது .

கடந்த நிலவரம்

கடந்த நிலவரம்

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் செய்யப்பட்ட டெஸ்டிங் என்று பார்த்தால் நேற்று 62 ஆயிரம் மாதிரிகள், அதன்முன் 60 ஆயிரம் மாதிரிகள், 52 ஆயிரம் மாதிரிகள், 55 ஆயிரம் மாதிரிகள், 54 ஆயிரம் மாதிரிகள், 40 ஆயிரம் மாதிரிகள், 45 ஆயிரம் மாதிரிகள், 48 ஆயிரம் மாதிரிகள் என்று 10 நாட்களாக 40-60 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களில் 5 லட்சம் + மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

தமிழகத்தில் இப்படி சோதனைகளை இமாலய வேகத்திற்கு அதிகப்படுத்தியதற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது. டெஸ்டிங்கை அதிகப்படுத்த, அதிகப்படுத்ததான் கொரோனா பரவல் சமூகத்தில் எந்த அளவிற்கு இருக்கும் என்று கண்டுபிடிக்க முடியும். இப்போது தமிழகத்தில் கேஸ்கள் அதிகம் வந்தாலும் கூட வரும் நாட்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இது மிக முக்கியமாக உதவும்.

Recommended Video

    Operation Warp Speed: கொரோனா மருந்துகளை ஆர்டர் செய்த அமெரிக்கா
    சர்ஜிக்கல் ஸ்டிரைக்

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்

    இன்று தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகம் வரலாம். ஆனால் வரும் நாட்களில் இதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தலாம். ஜூலை 31ம் தேதி லாக்டவுன் முடியும் முன் அதிக டெஸ்ட்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு முன் முடிந்த அளவு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம் குறிப்பிட தகுந்த வெற்றியை பெற்றுள்ளது.

    English summary
    Coronavirus: Tamilnadu completed overall 21 Lakh sample tests for the first time in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X