சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் தீவிரம் எடுக்கும் கொரோனா.. புதிய உச்சத்தை தொட்ட மொத்த பாதிப்பு.. இன்று 1875 கேஸ்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1875 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38716 ஆக உயர்ந்து இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. அரசு தீவிரமாக முயன்றும் கூட கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

முக்கியமாக தமிழகத்தில் கொரோனா சோதனைகள் அதிகரிக்க அதிகரிக்க கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மிக சரியான திட்டமிடலுடன் அரசு செயல்பட்டு வரும் நிலையிலும் கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புது உச்சம்.. சமூக பரவலாக மாறவில்லை.. அடித்துச் சொல்கிறது ஐசிஎம்ஆர் இந்தியாவில் கொரோனா பாதிப்பு புது உச்சம்.. சமூக பரவலாக மாறவில்லை.. அடித்துச் சொல்கிறது ஐசிஎம்ஆர்

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 1875 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38716 ஆக உயர்ந்து இருக்கிறது. சென்னையில் 1406 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27398 ஆக உயர்ந்துள்ளது. சென்னையின் நிலைமை மிக மோசமாக மாறி வருகிறது.

டிஸ்சார்ஜ் அதிகம்

டிஸ்சார்ஜ் அதிகம்

இன்று ஆறுதல் அளிக்க கூடிய ஒரே விஷயம் டிஸ்சார்ஜ்தான். இன்று அதிகமான நபர்கள் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் இன்று 1372 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் இதுவரை 20705 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 17659 ஆக உள்ளது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று அதிகமாக 23 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 349 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினசரி பலி எண்ணிக்கை 20க்கும் அதிகமாக செல்கிறது. மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தியாக மாறியுள்ளது.

மாவட்டங்கள்

மாவட்டங்கள்

சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக சென்னைக்கு அருகே உள்ள மாவட்டங்களில் கேஸ்கள் தீவிரம் அடைந்து வருகிறது. செங்கல்பட்டில் இன்று அதிகமாக 127 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 2444 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மிக அதிகமாக திருவள்ளூரில் 72 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 1656 பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கிறது.

சோதனை எத்தனை

சோதனை எத்தனை

தமிழகத்தில் மொத்தமாக 16829 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 655676 மாதிரிகளை தமிழகத்தில் சோதனை செய்துள்ளனர். அதேபோல் தமிழகத்தில் இன்று மொத்தம் 15456 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 625312 பேருக்கு இதுவரை கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது.

English summary
Coronavirus: TN sees another highest number of cases today too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X