தமிழகத்தில் முடிவுக்கு வரும் கொரோனா தொற்று... ஜீரோ ஆக்குவோம் என மா.சுப்ரமணியம் சவால்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ஜீரோ வாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 52,851 பேருக்குகொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்று 53,194 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

292 பேருக்கு கொரோனா
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான 320 ஐ விட குறைவாகும். சென்னையில் நேற்று 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று 83 ஆக குறைந்தது.

778 பேர் குணமடைந்தனர்
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1 நபர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,010 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 778 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,08,373 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 3 ஆயிரத்து 950 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி
இதனிடையே தமிழகத்தில் மொத்தம் 87 சதவிகிதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என்றும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தியோரில் 2-3 விழுக்காட்டினர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தனர் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ஜீரோவாக மாற்றுவோம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவித்திறன் நாள் குறித்த கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கடந்த 2ஆண்டுகலாக கொரோனா வேகமான பரவலாக இருந்து வரும் நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையாக 300க்கும் கீழே குறைந்துள்ளது.
இதை ஜீரோ வாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றார்.

மெகா தடுப்பூசி முகாம்
தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 3 வாரமாக நடைபெறாமல் இருந்த மெகா தடுப்பூசி முகாம் இந்த சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில், 23 வது முகாம் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 208 மருத்துவமனையில் மட்டுமே கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

நோய் எதிர்ப்பு ஆற்றல்
தமிழகத்தில் 87 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் 92 விழுக்காட்டினர் முதல் தவணையும் , 72 விழுக்காட்டினர் இரண்டாம் தவணையும் செலுத்தியுள்ளனர்.1 கோடிக்கும் மேற்பட்டோர் 2ஆம் தவணை செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தியோரில் 2-3 விழுக்காட்டினர் மட்டுமே கொரோனாவால் மரணமடைந்தனர் என்று கூறியுள்ளார் மா.சுப்ரமணியன்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இந்தியா தான் முக்கியமான அச்சாணி.. நங்கூரம் போல் நச்சுன்னு சீனாவிற்கு செக்.. அமெரிக்கா பாராட்டு -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications