கொரோனாவில் இருந்து மீண்ட தமிழகம்... 1794 பேர் இன்று டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,48,088
சென்னை: தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,48,088,. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,49,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து மொத்தம் 34,01,938 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 42 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 4 கோடி பேர் கொரோனாவின் பிடியில் சிக்கி மீண்டுள்ளனர். தமிழகமும் கொரோனா பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது.

மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 83,35,124 பேர் வந்துள்ளனர்.
சென்னையில் 133 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 374 பேருக்குத் தொற்று உள்ளது.
தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 265 தனியார் ஆய்வகங்கள் என 334 ஆய்வகங்கள் உள்ளன. தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,440.
இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 507. தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 292 பேர். பெண்கள் 215 பேர். மூன்றாம் பாலினத்தவர் யாருமில்லை. மாநிலம் முழுவதும் மொத்தம் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,48,088. மாநிலம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,794 பேர். மொத்தம் 34,01,938 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38000 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 9061 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 23 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் எவரும் இல்லை.
இன்று மாநிலம் முழுவதும் 41502 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25311 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 9842 ஐசியூ படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications