ஏப்ரல் 10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
ஏப்ரல் 10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை: நாடு முழுவதும் ஏப்ரல் 10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 15 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 83% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனாவின் பிடியில் உலகம் சிக்கியுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே பேராயுதமாக தடுப்பூசி திகழ்கிறது. கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக கொடுத்து வருகிறது.
இந்த இரு தடுப்பூசிகளையும் இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு போடும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்கியது. பின்னர் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும், தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி பயனாளிகள்
தடுப்பூசிக்கான பயனாளிகள் பட்டியலில் சுகாதார பணியாளர்கள் முதலிடத்தை பிடித்தனர். கடந்த ஆண்டு
மார்ச் 1ஆம்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதேநேரம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அனைவருக்கும் தடுப்பூசி
இந்நிலையில் கடந்த ஆண்டு மே 1ஆம்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்துடன் ஜூன் 21-ந்தேதி முதல் வெகுஜன இயக்கமாக இது மாற்றப்பட்டது. அதன்பின் தடுப்பூசி பணி வேகமடைய தொடங்கியது. கடந்த அக்டோபர் 21ஆம் தேதி 100 கோடி தடுப்பூசிகள் என்ற இமாலய இலக்கை இந்தியா எட்டியது. இதுவரைக்கும் 190 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

பூஸ்டர் தடுப்பூசி
வயதானவர்கள் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. உலகின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, எச்சரிக்கையாக இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூஸ்டர் டோஸ் யாருக்கு
தற்போது நாட்டில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. இந்த நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி
15-18 வயது வரையிலான பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. அதே போல, தற்போது, 12-14 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளியை குறைத்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

குறைந்து போன கொரோனா
கடந்த மே மாதத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலையில் அதிக அளவில் மரணங்கள் ஏற்பட்டன. மூன்றாவது அலையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தற்போது சீனா, தென்கொரியாவில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி
இதனிடையே ஏப்ரல் 10 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எந்த வயதினராக இருந்தாலும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள அவர்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் ஆகியிருக்க வேண்டும்.அப்படியிருக்கையில், இதுவரை 2.17 கோடி பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்று சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications