தனித்திரு...விலகியிரு... வீட்டில் அடங்கியிரு இல்லாவிட்டால் தெய்வத்திரு - கொரோனா மீம்ஸ்
கொரோனா காலத்தில் பலரும் தனிமையில் இருக்க அடங்காமல் பலரும் ஊர் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக வலைத்தளங்களில் பலரும் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
சென்னை : கொரோனா பரவல் தினசரியும் பலரையும் காவு வாங்கி வருகிறது. சாதாரண காய்சலில் ஆரம்பித்து தலைவலி, கண்வலி, தொண்டை எரிச்சல் என பலரையும் ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உலகத்தின் பல நாடுகளைத் தன் பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா. வைரஸ் பரவலைத் தடுக்க பலரும் ஊர் சுற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பலரும் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் லாக்டவுன் அமலில் உள்ளது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் அதையும் மீறி மக்கள் ஊர்சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர். மக்களைக் காக்க கொரோனா முன்களப்பணியாளர்கள் உயிரைப்பயணம் வைத்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். பலரும் அலட்சியமாகவே ஊர் சுற்றுகின்றனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை என கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தவித்து வருகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மீம்ஸ்களை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

தெய்வமே மாஸ்க் போடு
மாஸ்க் போடுங்கள் என்று எல்லோரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை பலரும் கேட்பதாக இல்லை. வடிவேலு பாணியில் மாஸ்க் போடு தெய்வமே உன்னை நம்பித்தான் உன் குடும்பமே இருக்கு என்று பதிவிட்டுள்ளார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.

எனக்கு பாசிட்டிவ்
கொரோனா பாசிட்டிவ் வந்தால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டம் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தாலும் அசால்டாக வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த மீம்ஸ்

கடவுளே காப்பாத்து
லாக்டவுன் காலத்தில் எல்லோருமே ஒர்க் ஃப்ரம் ஹோம்தான். அலுவலகம் சென்று வேலை செய்தவர்களும் இப்போது வீட்டில் இருப்பதால் மிக்சி, கிரைண்டர் எல்லாம் ரிப்பேர் ஆகாமல் இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டிருக்கின்றனர் கணவர்கள்.

18 வருஷம் எப்படி
லாக்டவுன் காலத்தில் எப்படி வீட்டிற்குள் அடங்கியிருப்பது என்று பலருக்கும் தெரியவில்லை வாகனங்களில் ஊர் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் எப்படி 18 வருடம் வீட்டிற்குள் தனிமைபடுத்திக்கொண்டு இருந்தார் என்று டிப்ஸ் கேட்கலாம் என்று பதிவிட்டுள்ளார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.

அடங்கியிருந்தால் ஆபத்தில்லை
காலையில் மருத்துவமனை போறோம், மதியம் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை, மாலை அதிதீவிர சிகிச்சை இரவு டோக்கன் வாங்கறோம் என்று லாக்டவுன் நாட்களில் வீட்டை விட்டு வெளியில் சுற்றுபவர்களுக்கு சரியான அடி கொடுத்துள்ளார் இந்த மீம்ஸ் பதிவர்.

ஐயரைப் பாரு
கொரோனா லாக்டவுன் காலத்தில் வீட்டை விட்டு போகும் ஒருவர் திரும்பி வராவிட்டால் தன்னை எங்கெல்லாம் வந்து பார்க்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

என்ன சொல்லுவீங்க
போனவருஷம் என்ன சொன்னீங்க வெயில் அடிச்சா கொரோனா போயிரும்னு சொன்னோம். இந்த வருஷம் ஆவி பிடிச்சா போயிரும்னு சொன்னோம். அடுத்த வருஷம் என்ன சொல்லுவீங்க என்று கேட்டுள்ளார் ஒரு பதிவர்.

வீட்டிலேயே இரு
தனித்திரு...விலகியிரு, வீட்டில் இரு என்று பலரும் சொல்கின்றனர். அதை யாரும் கேட்பது போல இல்லை. அரசு சொல்வதை கடைபிடிக்காவிட்டால் தெய்வத்திரு என்று பதிவிட்டுள்ளார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications