சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவுக்கு எதிராக நிற்கும் ஜிஎஸ்டி பூதம்.. கோவையில் மலருமா தாமரை.. சிக்கலில் சிபிஆர்

கோயம்புத்தூர் தொகுதியை கைப்பற்றுவது யார் என்பதில் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு அன்று எடுத்த பல அதிரடிகளின் விளைவுகள் கோவை தொகுதியின் வெற்றியில் பிரதிபலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது!

குண்டுவெடிப்புக்கு முன்பு வரை கோயமுத்தூரில் நிலவிய அரசியலே வேறு. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு ஏற்பட்ட மத ரீதியான பிளவுகளில் பாஜக இந்த தொகுதியை கெட்டியாக தக்க வைத்து கொண்டது.

அதனால்தான் இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தவுடனேயே ஒதுக்கிய 5 தொகுதிகளில் கோயமுத்தூர் தங்களுக்கு கண்டிப்பாக வேண்டும் என்றது.

கலக்கும் தமிழச்சி.. கலக்கும் தமிழச்சி.. "ம்மா.. என்கிட்ட சொன்னதை அப்படியே இவங்க கிட்ட சொல்லுங்க"!

 திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்

தற்போது தங்கள் வசம் உள்ள கோவையை வேறு வழியின்றி விட்டு தந்தது அதிமுக. ஏற்கனவே சிபி ராதாகிருஷ்ணன் இங்கு வெற்றி பெற்றவர்.. செல்வாக்கும் நிறைந்தவர்.. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இதையெல்லாம் மனதை வைத்து பாஜக இவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

அதிமுக

அதிமுக

கோவை எம்பி தொகுதி உட்பட 6 எம்எல்ஏ தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவுக்கு பலத்தை பெற்று தரும் என நம்பப்படுகிறது. சிபி ராதாகிருஷ்ணன் கவுண்டர் சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால், அந்த சமுதாய ஓட்டுக்களும், இதை தவிர குறிப்பிட்ட அளவு பாஜக ஓட்டுக்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

பலவீனங்கள்

பலவீனங்கள்

இவ்வளவும் சாதகமாக இருந்தாலும், பாஜக தரப்பில் சில பலவீனங்களும் தொகுதியில் எழுந்துள்ளன. சிபி ராதாகிருஷ்ணன் 2 முறை எம்பியாக இருந்திருக்கிறார். ஆனால் தொகுதி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது இவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு ஆகும். தொழிற்பகுதியான இங்கு ஜிஎஸ்டியால் சிறு குறு தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டதும், பணமதிப்பு இழப்பில் ஏற்பட்ட தொழில் நசிவும் பாஜகவுக்கு வெற்றிக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.

 அதிருப்தி

அதிருப்தி

இது எல்லாவற்றிற்கும் மேலாக பாஜக மாநில துணைதலைவர் வானதி சீனிவாசன் இந்த தொகுதியைதான் கேட்டு கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் அவர் தரப்பினர் ஒரு பக்கம் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதேபோல தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோவையை பாஜகவுக்கு தந்துவிட்டீர்களே என அதிமுகவினர் ஒரு பக்கம் அதிருப்தியில் உள்ளனர்.

 பி.ஆர். நடராஜன்

பி.ஆர். நடராஜன்

மற்றொரு தரப்பில் திமுக கூட்டணி சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்குகிறது. கூட்டணி அமைத்தவுடனேயே எங்களுக்கு கோவைதான் வேண்டும் என்று திமுகவை இக்கட்சி கேட்டுக் கொண்டது. 2009-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அதே வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்தான் இந்த முறையும் களம் காணுகிறார்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

மத்தியில் எடுத்த பல அதிரடி நடவடிக்கையால் தொழில்கள் பாதிக்கப்பட்டு, அவை இன்று கோவையில் பாஜகவுக்கு எதிராகவும், சிபிஎம் கட்சிக்கு ஆதரவாகவும் திரும்பி வருகின்றன. இருந்தாலும் பாஜக வேட்பாளர் பண பலம், அரசியல் பலம் நிறைந்தவர் என்பதால் சிபிஎம் வேட்பாளருக்கு இந்த விஷயத்தில் கொஞ்சம் திண்டாட்டம்தான் என்று சொல்லப்படுகிறது. பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று!

English summary
CP Radhakrishnan is contesting for the BJP in Coimbatore constituency. It is said that GST and Demonetization issues, will come against the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X