ஆளுநர் விளக்கம் வெறும் 'மழுப்பல்'.. “பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்”: சிபிஐ குரல்! ஓயாத சர்ச்சை!
சென்னை : ஆளுநர் அளித்துள்ள விளக்கத்தை ஏற்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிராகரித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தை தனது கருத்தாக ஆளுநர் கூறியதாகவும், கடுமையான எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்றும் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று அழைப்பதே சரியானது எனப் பேசி இருந்தார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகை பொங்கல் விருந்து அழைப்பிதழிலும் தமிழக ஆளுநர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டதால் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், தமிழ்நாட்டை தமிழகம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டது ஏன் என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை விளக்கம்
பண்டைய காலத்தில் தமிழ்நாடு என்பதே இல்லாததால்தான் காசியுடன் தமிழ் மக்களுக்கு உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். வரலாற்று சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் பேசியதாகவும், தனது பேச்சை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல் பொருள் கொள்வது தவறானது என்றும் ஆளுநர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைக்கும் அதிகாரமே இல்லை
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், "தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்ற நான் பரிந்துரைக்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது ஏற்புடையதல்ல. அதை பரிந்துரைக்கும் அதிகாரமும் அவருக்கு இல்லை. அப்படி பரிந்துரைத்தாலும் அதை யாரும் ஏற்கப் போவதில்லை. ஆளுநர் மனதில் இருப்பதைதான் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் கொள்கை
ஆளுநர் தவறுதலாகச் சொல்லிவிட்டார், தமிழ்நாடு அரசு கொடுத்த உரையில் சில பெயர்களையும், சில வார்த்தைகளையும் தவிர்த்துவிட்டு யதார்த்தமாக படித்தார் என்பது எதேச்சையாக நடந்தது அல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ் கொள்கையை வெளிப்படுத்துகிறார். அதில் தீவிரமாக இருக்கிறார். ஆளுநர் பதவியை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்து அவர் பணியாற்றினால் எந்த கேள்வியும் எழப் போவதில்லை.

அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் என்பது மாநிலங்களை ஏற்காத அமைப்பு. அதன் வரலாற்றை முழுமையாக படித்தவர்களால் அதை உணர முடியும். ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்துகளை தான் ஏதோ இயல்பாக சொல்வது போன்று அவர் தமிழ்நாட்டில் பேசிக் கொண்டிருந்தார். தற்போது கடுமையான எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக இப்படி விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அதுவும் தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு மட்டுமே ஆர்.என்.ரவி பதிலளித்திருக்கிறார்.

சட்டமன்ற உரை பற்றி வாய் திறக்கவில்லை
சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரை குறித்து அவர் வாய் திறக்கவில்லை. மொத்தத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை, லட்சியத்தை வெளிப்படுத்தும் முயற்சியாகவே இருந்தது. அவரது முயற்சி தமிழ்நாட்டில் தோல்வியடைந்துள்ளது. அதிமுகவைத் தவிர ஒட்டுமொத்த அரசியல் கட்சிகள், அறிஞர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர். எனவே இந்தப் பிரச்சனையிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியாகவே அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications