சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்க ஒதுக்கிற தொகுதிகளை வாங்கிட்டு போங்கன்னு சொன்னா எப்படிங்க தோழர்? திமுக மீது இ.கம்யூ அதிருப்தி

Google Oneindia Tamil News

சென்னை: போட்டியிட விரும்புகிற தொகுதிகளை கூட தர மறுத்து தாங்கள் ஒதுக்கும் தொகுதிகளை எடுத்து கொள்ளுங்கள் என திமுக கூறியிருப்பதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டசபை தேர்தலுக்கான திமுக அணியில் கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 13 இடங்களில் பிற கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைத்துள்ளது. மொத்தம் 187 தொகுதிகளில் உதசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை... இறுதியாகும் தொகுதி பங்கீடு?திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை... இறுதியாகும் தொகுதி பங்கீடு?

திமுக தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக தொகுதிகள் ஒதுக்கீடு

இதில் காங்கிரஸ் கட்சிக்குதான் 25 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. எஞ்சிய கட்சிகளுக்கு தலா 6 என சொற்ப எண்ணிக்கையில் தொகுதிகளை கொடுத்தது திமுக. இந்த சொற்ப எண்ணிக்கையை கூட பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக ஏற்றுக் கொள்கிறோம் என்றே வெளிப்படையாக இடதுசாரிகள் அறிவித்திருந்தனர்.

உதயசூரியனில் மதிமுக

உதயசூரியனில் மதிமுக

திமுகவை ஒருகாலத்தில் மிக கடுமையாக எதிர்த்தது மதிமுக. இன்று மதிமுகவின் 6 தொகுதி வேட்பாளர்களுமே உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் எனவும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அதனால் மதிமுகவுக்கு தொகுதிகள் எவை என்பதில் எந்த சிக்கலும் இருக்கப் போவதில்லை.

இ.கம்யூ தொகுதிகள்

இ.கம்யூ தொகுதிகள்

இந்த நிலையில் இடதுசாரிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்பதை உறுதி செய்வதிலும் திமுக கறார் நிலையை கடைபிடிக்கிறதாம். திமுகவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் குழு 9 தொகுதிகள் பட்டியலை கொடுத்து அதில் 6 தொகுதிகள் வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர்.

இ.கம்யூ அதிருப்தி

இ.கம்யூ அதிருப்தி

ஆனால் அந்த கட்சியின் குழு கொடுத்த 9 இடங்களில் ஒரு தொகுதிதான் கொடுக்க முடியும்; எஞ்சிய 5 தொகுதிகளும் நாங்க கொடுப்பதுதான்.. அதை வாங்கிட்டு போட்டியிடுங்க என பிடிவாதம் காட்டியதாம் திமுக. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் குழுவினர் கடுமையான அதிருப்தியில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியேறினராம்.

English summary
CPI Team very upset over the DMK's Stand on Seat Allocation for the Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X