“ஆளுநர் முறைகேட்டிற்கு அப்பாற்பட்டவரல்ல".. பன்வாரிலால் குற்றச்சாட்டுக்கு.. சிபிஎம் கடும் விமர்சனம்
சென்னை: பன்வாரிலால் புரோஹித் தமிழ்நாட்டில் ஆளுநராக பணியாற்றியபோது பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி விற்கப்பட்டது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த கருத்து அரசியல் தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அதிமுக ஆட்சி நடைபெற்றிருந்த நிலையில் பலர் அக்கட்சியை விமர்சித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஎம், "முறைகேடுகள் நடந்தது என்றால் ஆளுநர் அதை ஏன் தடுக்கவில்லை? ஆளுநரும் முறைகேட்டிற்கு அப்பாற்பட்டவரல்ல" என்று விமர்சித்துள்ளது.

முறைகேடு
தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோஹித், அரசு விழா ஒன்றில் பங்கேற்று பேசுகையில், "நான் தமிழ்நாட்டின் ஆளுநராக பணியாற்றியபோது அம்மாநிலத்தில் மோசமான சூழல் நிலவி வந்தது. பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி ரூ.40-50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அம்மாநிலத்தின் 27 பதவிகளுக்கு சட்டப்படி நான் ஆட்களை நியமித்தேன். என்னிடமிருந்து பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உரிமை
பன்வாரிலால் ஆளுநராக இருந்த காலத்தில் அதிமுகதான் ஆட்சி செய்துகொண்டிருந்தது என்பதால் அக்கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் மேலெழுந்தன. பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமையை மாநில அரசுக்குதான் இருக்கிறது என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வரும் நிலையில் பன்வாரிலாலின் கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, மாநில அரசு இந்த அதிகாரத்தை கையில் எடுத்தால் அது ஊழலுக்கு வழிவகுக்கும் என்று பாஜக ஆதரவாளர்கள் சிலர் கூறினர்.

விமர்சனம்
இந்நிலையில் பன்வாரிலாலின் கருத்துக்கு சிபிஎம் விமர்சனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "இன்றைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றிய காலத்தில் (அன்றைய அதிமுக ஆட்சியில்) தமிழ்நாட்டில் உள்ள பல்கலை கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களில் பெருமளவிலான முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

வாய்ப்பு
40/ 50 கோடி என பணம் பெற்றுக் கொண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கப்பட்டதாகவும், அக்காலத்தில் 27 பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதன்படி துணைவேந்தர் நியமனங்களில் மட்டும் ரூ. 1500 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்பதோடு, துணைவேந்தர் நியமனங்கள் மட்டுமல்லாது ஆசிரியர் நியமனங்களிலும் பல்லாயிரம் கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

கேள்வி
ஆளுநராக இருந்த ஒருவரே முன்வைத்திருக்கும் இத்தகைய ஊழல் குற்றச்சாட்டு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இது குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை தற்போது பகிரங்கமாக தெரிவித்துள்ள பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோது அதை ஏன் தடுக்காமல் அமைதி காத்தார் எனும் கேள்வியும் இயல்பாக எழுகிறது.

பங்கு
எனவே, ஆளுநரும் முறைகேட்டிற்கு அப்பாற்பட்டவரல்ல என்றே கருத வேண்டியுள்ளது. அன்றைய அதிமுக அரசில் லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர் உள்ளிட்ட பணி நியமனங்களை மேற்கொண்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது." என்று கூறியுள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications