விஜய் மீது “உருவகேலி”.. செல்பியில் முகத்தை ஜூம் செய்து “கிண்டல்”! வன்மம் கக்கும் டிடிஎப் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் "வாரிசு" திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி படத்தை ஜூம் செய்து பலரும் அவரது முகத்தை வைத்து உருவ கேலி செய்து வருகிறார்கள்.

நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி இருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இதனை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரித்து உள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து உள்ள இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

வாரிசு

வாரிசு

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு தமன் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கில் பாடலான ரஞ்சிதமே கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இசை வெளியீட்டு விழா

இசை வெளியீட்டு விழா

இதனை தொடர்ந்து தீ தளபதி எனத் தொடங்கும் இப்படத்தின் 2 வது பாடல் சமீபத்தில் வெளியானது. சிம்பு பாடி நடித்து இருக்கும் இப்பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

விஜய் எடுத்த செல்பி

விஜய் எடுத்த செல்பி

இதில் நடிகர் விஜய் தனது போட்டியாளர் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அத்துடன் அங்கு திரண்டு இருந்த ரசிகர்களோடு சேர்ந்து நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி படமும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் அதிகளவில் பகிரப்பட்டது. விஜய் ரசிகர்களும் இதை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து வந்தனர்.

 டிடிஎப் ரசிகர்களின் உருவகேலி

டிடிஎப் ரசிகர்களின் உருவகேலி

இந்த நிலையில் சமீபத்தில் வாரிசு ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட செல்பி படத்தில் அவரது முகத்தை ஜூம் செய்து அவரை உருவ கேலி செய்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் இவ்வாறு உருவ கேலி செய்து வருவோர்களில் பெரும்பாலானோர் டிடிஎப் ரசிகர்கள் என்று கூறப்படுகிறது.

டிடிஎப் வாசன் பேட்டி

டிடிஎப் வாசன் பேட்டி


சமீபத்தில் பேட்டியளித்த சர்ச்சைக்குரிய மோட்டோ யூடியூபர் டிடிஎப் வாசன், நடிகர் விஜய்யுடன் போட்டிபோடக்கூடாதா என்ற தொனியில் பேசியது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. விதிமீறி அவர் பைக் ஓட்டி செல்வதை பொதுமக்கள் விமர்சித்து வந்த நிலையில் விஜய் ரசிகர்களும் அவர்களோடு சேர்ந்துகொண்டு விமர்சித்தார்கள்.

விஜய் மீது விமர்சனம்

விஜய் மீது விமர்சனம்

இந்த நிலையில் நடிகர் விஜய்யை டிடிஎப் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். விஜய்யை டிடிஎப் வாசனோடு ஒப்பிட்டும் பதிவுகள் வருவதை காண முடிகிறது. பொதுவாக அஜித் - விஜய் ரசிகர்கள் இடையே மோதல் சமூக வலைதளங்களில் மோதல் ஏற்படும் நிலையில் இம்முறை விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளனர் டிடிஎப் ரசிகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+