அஸ்வின் சொன்ன பெயர்.. இதுக்கு தான் தோனி லண்டனில் முகாமிட்டாரா? ரகசியம் காக்கும் சிஎஸ்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப தோனியும் கடந்த மாதம் முழுவதும் இங்கிலாந்திலேயே முகாமிட்டு இருந்தார். இதனால் இயன் மோர்கனை தோனி சந்தித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

18 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ஸ்டீபன் பிளமிங் கடந்த மாதம் பதவி விலகினார். இதன்பின் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். இது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஏனென்றால் சிஎஸ்கே அணி இன்னும் பழைய ஸ்டைலில் டி20 கிரிக்கெட்டை ஆடுவதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.

CSK MS Dhoni Eoin Morgan

இதனால் சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. முதற்கட்டமாக ஹேமங் பதானி, ஆடம் வோஜஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் பேசப்பட்டது. ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் எந்த ஆர்வமும் காட்டவில்லை. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு ஒரு வெளிநாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படவே வாய்ப்பு உள்ளதாக அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறி இருந்தார்.

இதனால் பிரண்டன் மெக்கல்லம், மைக் ஹசி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோவில், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக இயன் மோர்கன் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. அவரின் பெயர் தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகிகளிடம் முதற்கட்ட பேச்சுகள் எழுந்திருப்பது உண்மை என்றே கருதுகிறேன்.

அதேபோல் இயன் மோர்கனிடம் ஏற்கனவே சில ஐபிஎல் அணிகள் பயிற்சியாளர் பொறுப்புக்காக பேசி இருந்தார்கள். ஆனால் இயன் மோர்கன் தனக்கு நேரம் வேண்டும் என்று அந்த ஆஃபரை ஏற்க மறுத்துவிட்டார். இங்கிலாந்து கிரிக்கெட் சங்கத்தின் ஆஃபரை கூட நிராகரித்திருக்கிறார். பெரிய அனுபவம் இல்லையென்றாலும், இயன் மோர்கனின் அணுகுமுறை மீது பலரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

சிஎஸ்கே அணியின் ஆஃபரை இயன் மோர்கன் ஏற்றுக்கொள்ள வாய்ப்புகளும் அதிகம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே தோனி கடந்த மாதம் இங்கிலாந்தில் முகாமிட்டிருந்த போது, சிஎஸ்கே பயிற்சியாளர் பணிக்காக சிலரை சந்தித்ததாக சொல்லப்பட்டது. இதனால் தோனி - இயன் மோர்கன் சந்திப்பு நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் சென்னையில் தான் முகாமிட்டுள்ளனர். சிஎஸ்கே அணிக்கு சொந்தமான நாவலூர் மைதனாத்தில் இருவரும் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இன்னும் ஒரு சில வாரங்களில் பயிற்சியாளர் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+