Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளில் சேர க்யூட் தேர்வு.. ஆன்லைன் விண்ணப்பம் - முழு விபரம்

42 மத்திய பல்கலைக்கழகங்களில் முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் CUET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வுக்கு, ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பிக்கலாம் என்றும், பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. CUET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியது.

இந்தியாவில் உள்ள JNU, புதுச்சேரி பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 42 மத்திய பல்கலைக்கழகங்களில் M.A., M.Com., MBA., M.Sc., உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர பொதுநுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

வரும் கல்வியாண்டுக்கான பொதுநுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் வரும் ஜூன் 18-ம் தேதி வரை https://cuet.nta.nic.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்கள்

மத்திய பல்கலைக்கழகங்கள்

நாடு முழுவதும் உள்ள 42 மத்திய பல்கலைக்கழகங்கள், இணைப்புக் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வுக்கு, ஒற்றைச் சாளர முறையில் விண்ணப்பிக்கலாம் என்றும், பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதுவரை மத்திய பல்கலைக்கழகங்கள் தனித்தனியே நுழைவுத் தேர்வுகளை நடத்திவந்த நிலையில், இனி ஒரே நுழைவுத் தேர்வு மட்டுமே நடத்தப்பட உள்ளது. CUET - UG தேர்வைப் போல் CUET - PG தேர்வும் கணினி அடிப்படையிலான தேர்வாக ஜூலை இறுதி வாரத்தில் நடைபெறும் என்றும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இளங்கலை க்யூட் தேர்வுக்கு விண்ணப்பம்

இளங்கலை க்யூட் தேர்வுக்கு விண்ணப்பம்

க்யூட் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க மே 22ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு அண்மையில் யுஜிசி சார்பில் வெளியானது. ஜூலை முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது.

என்னென்ன கேள்விகள்

என்னென்ன கேள்விகள்

பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் 3 பிரிவுகளாகக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும்.

விருப்ப மொழி தேர்வு

விருப்ப மொழி தேர்வு

இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம்.
2ஆவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்

கால அவகாசம் நீட்டிப்பு

கால அவகாசம் நீட்டிப்பு

3ஆவது பிரிவில், பொதுவான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத் திறன், கணக்குத் திறன், தர்க்க மற்றும் பகுத்தறியும் திறன் சார்ந்த கேள்விகள் இந்தப் பிரிவில் கேட்கப்படும். க்யூட் யுஜி படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கு மே 6ஆம் தேதி கடைசியாக இருந்த நிலையில், கால அவகாசம் மே 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்வர்கள் https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+