மாண்டஸ் புயல்..சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..உங்க ஊர் இருக்கா உஷார்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது , சென்னைக்கு தென்கிழக்கில் 550 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி வரும் ஒன்பதாம் தேதி நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காரைக்காலுக்கு கிழக்கு - தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னையில் இருந்து தென் கிழக்கில் 550 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு புயல் கரையை கடக்கும். நாளை இரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
மாண்டஸ் புயல் காரணமாக நாளை தமிழ்நாடு, ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலையில் 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல் தற்போது 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும். தமிழக கடலோர பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில், சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். நாளை 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். டிசம்பர் 10ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் டிசம்பர் 10ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூரில் மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications