சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் மாண்டஸ் புயல்..மக்களே உஷார்..உதவி எண்கள் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது.

Cyclone Mandous making landfall near Mamallapuram helpline numbers announced

பொதுமக்கள் அவசர உதவி, புகார்களை தெரிவிக்க 1913 என் உதவி எண்ணில் அழைக்கலாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகாமையில் நிற்பதை தவிர்க்க வேண்டும், புயல் எச்சரிக்கையால் பொதுமக்கள், மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி வலியுறுத்தியது.

இந்நிலையில், மாண்டஸ் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,

புயலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவசர உதவி, புகார்களை தெரிவிக்க 1913 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம். பொதுமக்களை தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கையால் பொதுமக்கள் சென்னை மெரினா, பெசன்ட் நகர் போன்ற கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை தவிக்க வேண்டும்.

காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மரங்களின் அருகாமையில் நிற்பதை தவிர்க்க வேண்டும். தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் கீழ் நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல்..சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..உங்க ஊர் இருக்கா உஷார் மாண்டஸ் புயல்..சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..உங்க ஊர் இருக்கா உஷார்

இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசிக்க உள்ளனர்.

மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மற்றும் சீரடிக்கு செல்லும் 4 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு செல்லும் 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச்செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Cyclone Mandous is likely to make landfall near Mamallapuram, the Chennai Meteorological Department has predicted. The Chennai Corporation has said that all precautionary measures have been taken to face Cyclone Mandus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X