கரையை நெருங்கும் மாண்டஸ்! இன்னும் கொஞ்சம் நேரம் தான்! ஆனால்.. எதிர்பார்த்த மழை இல்லையே! என்ன காரணம்?
சென்னை : அடுத்த ஒரிரு மணி நேரத்தில் மாண்டஸ் புயலின் கண் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. மாமல்லபுரத்திற்கு 45 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 90 கி.மீ தொலைவிலும் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.
மாண்டஸ் புயலின் மையப் பகுதி இன்னும் கடலில் உள்ளதால் கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்தில் நடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த இரண்டு மூன்று மணி நேரங்களில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு மிக அருகே 90 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கும் நிலையில் வெளிப்புற பகுதி கரையை கடக்க ஆரம்பித்திருக்கிறது. இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக புயலின் கண் கரையை கடந்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு மிக அருகே மாண்டஸ்! சூறாவளி காற்றுடன் கொட்டித்தீர்க்கும் மழை! அடுத்த 3 மணி நேரம் ஜாக்கிரதை

தொடர் மழை
அதன் பின்னர் புயலின் பின் பகுதி கரையைக் கடக்க அதிகாலை வரை ஆகும். இதனால் தொடர் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. நேரங்களில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிக அளவு காற்றின் வேகம் இருக்கிறது. இதனால் சென்னை காசிமேடு பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிரமாக காற்று வீசி ஒரு நிலையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. பொதுவாக அதிக அளவில் வேகமாக காற்று வீசும் போது மழையின் அளவு குறைவாக இருக்கும் மலையின் அளவு அதிகமாக இருந்தால் காற்றின் வேகம் குறைவாக இருக்கும்.

கண் பகுதி
தற்போது மாண்டஸ் புயலின் வெளிப்புற பகுதிகள் ஆந்திர மாநில எல்லையில் இருந்து கிட்டத்தட்ட புதுச்சேரி எல்லை வரை தொடர்ந்து இருக்கிறது. சுற்றுவட்ட பகுதிகளில் தொடர்ந்து காற்றின் பரப்பு அதிக அளவில் இருப்பதால் மழை குறைந்து காணப்படுகிறது. புயலின் கண் கரையை கடந்த பிறகு அதற்குப் பிறகு பின்பகுதி கடக்கும். பொதுவாக புயலில் மூன்று பகுதிகள் கரையை கடக்கும். முன் பகுதி, கண் பகுதி, பின் பகுதி. தற்போது முன் பகுதி கரையை கடந்திருக்கும் நிலையில் கண் பகுதி கடந்த பின் பகுதியும் கடக்கும்.

மழை பெய்ய வாய்ப்பு
அப்போது அதிகாலை வரை இந்த நிகழ்வில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது தற்போது அதிக அளவில் காற்று வேகமாக வீசு வருவதால் தான் மழை குறைந்து இருக்கிறது என்கின்றனர் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள். தற்போது மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கி இருக்கும் நிலையில் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

பலத்த காற்று
தற்போது சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே மரங்கள் விழ தொடங்கியிருக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் வெளியே செல்ல நேர்ந்தால் கவனமாக இருக்கவும். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் கவனம் தேவை என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.