"மேலே செல்கிறது.. ஒரே நாள்தான்".. டவ்-தே புயல் பற்றி வெதர்மேன் கணிப்பு.. தமிழகத்திற்கு குட் நியூஸ்
சென்னை: தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யுமா, மழை தீவிரம் அடையுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று புயலாக மாறியது. இதற்கு டவ்-தே புயல் என்று பெயர் வைக்கப்பட்டது. நாளை டவ்-தே புயல் அதி தீவிர புயலாக மாற உள்ளது.
இந்த டவ்-தே புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கேரளாவில் தீவிரமாக மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை அருகே இருக்கும் பகுதிகளில் தீவிரமாக மழை பெய்து வருகிறது.

நாளை
இந்த புயல் 17ம் தேதி அதி தீவிர புயலாக அரபிக்கடலில் உருமாறும். அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் போது இதன் வேகம் 160 கிமீ வரை கூட இருக்கும். இந்த புயல் காரணமாக 220 மிமீ வரை கடுமையான மழை பெய்யும். குஜராத் மேற்கு பகுதியில் இந்த புயல் கரையை கடக்க உள்ளது.

மோசம்
டவ்-தே புயல் காரணமாக கேரளா, தமிழ்நாடு, கோவா, கர்நாடக, குஜராத் , மகாராஷ்டிரா ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. இந்த நிலையில் புயலின் திசை கொஞ்சம் லேசாக திரும்பி உள்ளது. அதாவது புயலின் பெரும் பகுதி நிலத்திற்கு அருகில் இல்லாமல் கடலின் பகுதியில் உள்ளது.

அருகில் வரவில்லை
நிலத்திற்கு அருகில் புயலின் பெரும் பகுதி இல்லாத காரணத்தால் கேரளா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் கொஞ்சம் தப்பித்துள்ளது. இது தொடர்பாக டிவிட் செய்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப், தற்போது பெரும்பாலான மேகங்கள் மேற்கு பகுதியில் உள்ளது. நிலப்பகுதி இருக்கும் கிழக்கு பகுதியில் பெரிதாக மேகங்கள் இல்லை.

மேகம்
இதனால் மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரிய மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இரண்டு மாநிலங்களிலும் ஒரு நாள் மட்டும் கனமழை பெய்யும். மேற்கு குஜராத் பகுதி மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அங்கு கனமழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாடு
இதனால் தமிழ்நாடு, கேரளாவில் மழையின் அளவு குறையும். புயல் மேலே சென்று கொண்டு இருப்பதால், மழையின் தீவிரம் தமிழகத்தில் குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் இந்த புயல் பெரிய சேதங்களை ஏற்படுத்துமா என்று அச்சம் இருந்த நிலையில் டவ்-தே புயல் காரணமாக தமிழகத்தில் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications