அலட்சியம் காட்டும் ஆவின் அதிகாரிகள்! 48 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுபோகும் அபாயம்? தட்டுப்பாடு வருமா?
சென்னை : அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக ஆவின் பால் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் 48 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போகும் ஆபத்து இருப்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி எச்சரித்துள்ளார்.
சென்னையில் தினமும் 11 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் 48ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போகும் ஆபத்து இருப்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி எச்சரித்துள்ளார்.

ஆவின் பால் பண்ணை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் ஆவின் பாலானது பல்வேறு காரணங்களால் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து காலதாமதமாகவே விநியோகம் நடைபெற்று வருகிறது. நிலையில் அம்பத்தூர் பால் பண்ணையில் பால் பேக்கிங் செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டுகளில் லீக்கேஜ் இருக்கிறதா..? என்பதை பரிசோதிக்கப்படுகிறது.

கடுமையாக பாதிப்பு
லீக்கேஜ் பால் பாக்கெட்டுகளை தனியே எடுத்து விட்டு நல்ல பால் பாக்கெட்டுகளை காலி பால் டப்புகளில் அடுக்கி ரூட் வண்டி என்று சொல்லக்கூடிய நுகர்வோர் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும் வாகனங்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் வாகனங்களில் ஏற்றும் பணிகளை செய்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில தினங்களாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.

பால் டப்புகள் தேக்கம்
இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில தினங்களாக லீக்கேஜ் ஆன பால் பாக்கெட்டுகள் அடங்கிய சுமார் 4 ஆயிரம் பால் டப்புகள் (சுமார் 48ஆயிரம் லிட்டர் பால்) மறு சுழற்சி செய்ய முடியாமல் பால் பண்ணைக்குள் தேக்கமடைந்துள்ளதாகவும், அதன் காரணமாக காலி பால் டப்புகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் காரணமாகவே பால் விநியோகம் மிகவும் காலதாமதம் ஆவதாக கூறப்படுகிறது.

மிகப்பெரிய இழப்பு
மேலும் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படும் 4ஆயிரம் டப்புகளில் உள்ள சுமார் 48ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போய் ஆவினுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆவின் அதிகாரிகள் தரப்பில் அந்த தகவல் அரசுக்கும், ஆவின் உயரதிகாரிகளுக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி தேக்கமடைந்துள்ள பாலினால் சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் டப்புகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தினசரி பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செய்து, அதனை அடுக்கி மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் பால் முகவர்களுக்கு விநியோகம் செய்ய மிகவும் காலதாமதம் ஆகிறது எனவும் சொல்லப்படுகிறது.

தீர்வு காண வேண்டும்
இதன் காரணமாக கடந்த சில தினங்களாக மிகவும் காலதாமதமாக பால் முகவர்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்யப்படுவதாலும், தற்போது கோடை காலம் என்பதாலும் ஆவின் பால் விரைவில் கெட்டுப்போய் விடுகிறது. இதன் காரணமாக பால் முகவர்களும், நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும், பால்வளத்துறை அமைச்சர் அவர்களும் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் நிலவும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கும், தட்டுப்பாடாக இருக்கும் காலி பிளாஸ்டிக் பால் டப்புகள் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டும்

அதிகாரிகள் மீது நடவடிக்கை
தற்போது அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படும் சுமார் 48ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போகும் சூழல் இருப்பதால் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அந்த இழப்பை அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும், கெட்டுப் போன ஆவின் பாலினால் இழப்பை சந்தித்து வருகின்ற பால் முகவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். " என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications