அந்த ஒரு மணி நேரம் எங்க போனீங்க? இரண்டாவது மனைவிக்கு டான்ஸர் ரமேஷின் முதல் மனைவி கேள்வி
கணவர் இறந்த போது ஒரு மணி நேரமாக இன்பவள்ளி எங்கே இருந்தார் என டான்ஸர் ரமேஷின் முதல் மனைவி கேள்வி
சென்னை: கணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறும் அந்த ஒரு மணி நேரம் இன்பவள்ளி எங்கே போனார் என டான்ஸர் ரமேஷின் முதல் மனைவி சித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் கூலித் தொழிலாளியாக இருந்தவர் ரமேஷ். இவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடனம் ஆடி வந்தார். பிரபுதேவா, மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்டோரின் சாயல் இவரது நடனத்தில் இருந்ததால் அவருக்கு அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் ரசிகர்களாகிவிட்டனர்.
இவர்களும் ரமேஷ் ஆடும் நடனத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அன்று முதல் இவரது வீடியோ வைரலானது. இதையடுத்து அவர் டான்ஸர் ரமேஷ் என அழைக்கப்பட்டார். டிக்டாக், இன்ஸ்டா என எங்கு சென்றாலும் அங்கு அவரது வீடியோக்கள் பிச்சிக் கிட்டு போனது.

டான்ஸர் ரமேஷ்
டான்ஸர் ரமேஷுக்கு இரு மனைவிகள், முதல் மனைவி சித்ரா. இவர்களுக்கு இரு மகள்கள். ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது. அவர் கரப்பமாக உள்ளார். இந்த நிலையில் புளியந்தோப்பை சேர்ந்த இன்பவள்ளியுடன் ரமேஷுக்கு பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலானது. இருவரும் அவ்வப்போது தனிமையில் தங்களது காதலை வளர்த்தனர்.

சித்ரா
இது முதல் மனைவி சித்ராவுக்கு தெரியவரவே, பின்னர் அவருடன் சண்டை போட்டுக் கொண்டு இன்பவள்ளியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு புளியந்தோப்பில் உள்ள கே.பி. பார்க் குடியிருப்பில் தங்கியிருந்தார். தனது கணவரை இன்பவள்ளியிடம் இருந்து மீட்க சித்ரா போராடி பார்த்துவிட்டு ஒரு கட்டத்தில் விட்டுவிட்டார்.

திருந்தி வாழ விரும்பிய ரமேஷ்
திருந்தி வாழ விரும்புகிறேன் என கூறி சித்ராவிடமே மீண்டும் வந்த டான்ஸர் ரமேஷுக்கு தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி சினிமாவில் சான்ஸ் வாங்கிக் கொடுத்தார் சித்ரா. அதன்படி துணிவு, ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் ரமேஷ் நடித்துள்ளார்.

10 ஆவது மாடி
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு டான்ஸர் ரமேஷ் கே.பி.பார்க் வீட்டில் உள்ள 10 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை முதல் மனைவி சித்ரா நம்பவில்லை. இதையடுத்து இவரது புகாரின் பேரில் ரமேஷின் மரணம் சந்தேக மரணமாக பதிவாகியிருந்தது. இதையடுத்து இன்பவள்ளியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

10 ஆவது மாடியில் தற்கொலையா கொலையா
அதில் இன்பவள்ளி கூறுகையில் ரமேஷ் தன்னிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார், தான் தர மறுத்ததால் 10 ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தார். இந்த நிலையில் இன்பவள்ளி டான்ஸர் ரமேஷை கம்பால் சரமாரியாக தாக்குவது போலும் அதற்கு வலி தாங்க முடியாமல் ரமேஷ் கதறுவது போலும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலைதான்
இந்த நிலையில் ரமேஷின் முதல் மனைவி சித்ரா ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் தனது கணவர் ரமேஷின் மரணம் முழுக்க முழுக்க கொலைதான். என்னிடம் ஒரு வீடியோ உள்ளது. அந்த வீடியோ 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கபபட்டது. என் கணவரை இன்பவள்ளி துன்புறுத்தி அவரே எனக்கு அந்த வீடியோவை அனுப்பியும் வைத்துள்ளார்.

ஒரு மணி நேரம் வரலை
ஆனால் ரமேஷுடன் அவர் சண்டையே போட்டதில்லை என பொய் சொல்கிறார். மாலை 4 மணிக்கு என் கணவர் மாடியிலிருந்து கீழே குதித்ததாக சொல்லும் இன்பவள்ளி அவர் விழுந்ததை 5 மணிக்குத்தான் பார்த்ததாக சொல்கிறார். அந்த ஒரு மணி நேரம் அவர் எங்கே சென்றார். ரமேஷுடன் அன்பாக வாழ்ந்ததாக கூறும் இன்பவள்ளி, இறுதியாக அவருடைய முகத்தை பார்க்கக் கூடவரவில்லை. கீழே விழுந்து கிடந்த போதும் கூட அவர் முகத்தை இன்பள்ளி பார்க்கவில்லை. எனவே எனது கணவரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என சித்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications