அண்ணாமலை நடிகர்..வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசக்கூடாது - தயாநிதி மாறன் அட்டாக்

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என அண்ணாமலை பேசுகிறார் என்று தயாநிதி மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் கேட்டது தமிழகத்தில் உள்ள பாஜகவினருக்கும் சேர்த்து தான் என்று தயாநிதிமாறன் கூறியுள்ளார். அண்ணாமலை நல்ல நடிகர் என்றும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என அவர் பேசக்கூடாது என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமையன்று தொடங்கி வைத்தார். விழா மேடையில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் 5 கோரிக்கைகள் முன் வைத்து பேசினார். மத்திய- மாநில அரசுகள் உறவு, கூட்டாட்சி தத்துவம், திராவிட மாடல் என்றால் என்ன? என்பது குறித்து விரிவாக பேசினார். மேலும் மத்திய அரசு என குறிப்பிடாமல் பலமுறை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு உரிமையை நிலைநாட்டவேண்டிய நேரமிது. தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். நீட் விலக்கு சட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். உறவுக்கு கைகொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம் எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை பேச்சு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பேசிய அனைத்துமே பொய். அனைத்துமே முன்னுக்குப் பின் முரணானவை என்று சொன்னார் அண்ணாமலை. முதல்வர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் தமிழக அரசியலில் கரும்புள்ளி. முதல்வர் ஸ்டாலின் பேசிய ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் பாஜக பதில் தரும் என்று தெரிவித்தார்.

அண்ணாமலை நடிகர்

அண்ணாமலை நடிகர்

சென்னை, துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் மழைநீர் வடிகால்வாய் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் துவக்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தார். செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறனிடம், பிரதமரை மேடையில் வைத்து தமிழக முதல்வர் அரசியல் நாடகம் நடத்தினார் என அண்ணாமலை கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, அண்ணாமலை நடிகர் தானே. அவர் நடிப்பார். அதற்கு நான் என்ன செய்வது? என்றார்.

முதல்வர் என்ன கேட்டார்

முதல்வர் என்ன கேட்டார்

தொடர்ந்து பேசிய அவர், இரண்டு முறை பிரதமரை நேரில் சந்தித்து தமிழகத்துக்கான கோரிக்கைகளை முதல்வர் கூறினார். ஆனால் நடவடிக்கைகள் இல்லை. எனவே மக்களின் முன்னிலையில் எடுத்து உரைத்தார். அப்போதாவது பிரதமர் காதில் விழுந்து நடவடிக்கை எடுக்கட்டும். எங்கள் முதல்வர் என்ன கேட்டார்? தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 10 சதவீதத்தில் ஒரு சத வீதம் தான் கிடைக்கிறது. அதை எடுத்து கூறினார்.

 அண்ணாமலை பேசக்கூடாது

அண்ணாமலை பேசக்கூடாது

பிரதமரிடம் இதை கேட்காமல் வேறு எதை கேட்பது? வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என அண்ணாமலை பேசுகிறார். பெட்ரோல் விலை உயர்ந்த போது எங்கு போனார் அண்ணாமலை? திமுக ஆட்சிக்கு வந்த உடன் பெட்ரோல் விலை குறைத்தோம், பால்.விலை குறைத்தோம். முதல்வர் கேட்டது தமிழகத்தில் உள்ள பாஜகவினருக்கும் சேர்த்து தான் என தெரிவித்தார்.

Recommended Video

    DMK-வின் Corruption பற்றி Annamalai பரபரப்பு தகவல் | #Politics | OneIndia Tamil
     தேவையில்லாத பேச்சு

    தேவையில்லாத பேச்சு

    எங்கள் முதல்வர் என்ன கேட்டார்? தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 10 சதவீதத்தில் ஒரு சத வீதம் தான் கிடைக்கிறது. அதை எடுத்து கூறினார். பிரதமரிடம் இதை கேட்காமல் வேறு எதை கேட்பது? வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என அண்ணாமலை பேசுகிறார். பெட்ரோல் விலை உயர்ந்து போது எங்கு போனார் அண்ணாமலை? திமுக ஆட்சிக்கு வந்த உடன் பெட்ரோல் விலை குறைத்தோம், பால்.விலை குறைத்தோம். முதல்வர் கேட்டது தமிழகத்தில் உள்ள பாஜகவினருக்கும் சேர்த்து தான் என தெரிவித்தார் தயாநிதி மாறன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+