சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்கள் முயற்சிக்கு கை மேல் பலன்! சொன்னபடி செய்தார் முதல்வர்! டிசம்பர் 3 இயக்கம் நெகிழ்ச்சி!

Google Oneindia Tamil News

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்கிய விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் தனது வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக டிசம்பர் 3 இயக்கம் நன்றி தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு தங்கள் கோரிக்கையை கவனமுடன் கேட்ட முதல்வர் ஸ்டாலின், நிதி நிலைமை சீரானவுடன் உயர்த்தி வழங்குவதாக கூறினார் என்றும் இன்று அதே போல் நடந்துகொண்டார் எனவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான டிசம்பர் 3 இயக்கம் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

சேலத்தில்.. பேராசிரியையே கூப்பிட்டு வைத்து ராகிங் செய்த சீனியர்கள்.. கொடுமைசேலத்தில்.. பேராசிரியையே கூப்பிட்டு வைத்து ராகிங் செய்த சீனியர்கள்.. கொடுமை

டிசம்பர் 3 இயக்கம்

டிசம்பர் 3 இயக்கம்

2021 ஆவது ஆண்டு டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை எங்களது இயக்கத்தின் சார்பாக சந்தித்த போது மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் சார்ந்து 35 கோரிக்கைகளை வழங்கினோம். அதில் முக்கிய கோரிக்கையாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை நீண்ட நாட்களாக உயர்த்தாமல் இருந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தோம்.

மனவளர்ச்சி குறைபாடு

மனவளர்ச்சி குறைபாடு

மனவளர்ச்சி குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் கடும் ஊனமுற்றோர் ஆகியோர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகையை ரூ.1500/- இருந்து ரூ.2000/- மாக உயர்த்தி வழங்கிய போது அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 08-01-2022 அன்று மீண்டும் சந்தித்த போது இதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். அதனை கவனமுடன் கேட்ட தமிழ்நாடு முதல்வர் நிதி நிலைமை சீரானவுடன் உயர்த்தி வழங்குவதாக கூறினார்.

உதவித்தொகை

உதவித்தொகை

தற்போது 2022 டிசம்பர் 3 இந்த உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் வருவாய் துறை மூலம் உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை ரூ.1500/- ஆக உயர்த்தி வழங்கி உள்ளார். எங்களின் கோரிக்கை' ரூ.1000/- ஏற்று ஓரே வருடத்தில் உதவித்தொகை உயர்த்தி வழங்கியமைக்கு மிக்க நன்றியை டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பாக மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.

அடுத்த கோரிக்கை

அடுத்த கோரிக்கை

மேலும் இனிவரும் காலங்களில் கடைக்கோடி மாற்றுத்திறனாளிகளின் நிலையை கருத்தில் கொண்டும் விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல் உதவித்தொகையை உயர்த்தி வழங்க முன் வர வேண்டும் என்ற கோரிக்கையை இந்த உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் அவர்களிடம் மிகக் கனிவோடு முன் வைக்கின்றோம்.

English summary
The December 3 Movement thanked Chief Minister Stalin for fulfilling his promise of increasing the stipend for disabled persons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X