கிளாம்பாக்கம், மறைமலைநகர், கோயம்பேடு.. ஆயுத பூஜை, தீபாவளிக்கு ஊருக்கு செல்ல 6 பஸ் நிலையங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளம்பாக்கம் பேருந்து நிலையம், கிளம்பாக்கம், சி.எம்.டி.ஏ. காலநிலை பூங்கா, மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் ஆகிய ஆறு இடங்களில் இருந்து ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு சென்னையில் பேருந்துகள்புறப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

ஆயுதபூஜையையொட்டி நாளை (வியாழக்கிழமை) முதல் 18-ந் தேதி வரையும், தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 2 தற்காலிக பேருந்து நிலையங்கள் உள்பட சென்னையில் உள்ள 6 பேருந்து நிலையங்களில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் புறப்படும் என்ற விவரங்களை பார்ப்போம்.

Details of bus terminals in Chennai for operation of buses during the Ayudha Puja Diwali festivals

கிளம்பாக்கம் பேருந்து நிலையம் - புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

கிளம்பாக்கம், சி.எம்.டி.ஏ. காலநிலை பூங்கா அருகில் உள்ள திறந்த வெளி இடம் (தற்காலிக பேருந்து நிலையம்) - வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம் (சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது) - கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு பேருந்து நிலையம் - கிழக்கு கடற்கரை (ஈ.சி.ஆர்.), காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம் - பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.


சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல ஆயுத பூஜை, தீபாவளியையொட்டி 15,285 சிறப்பு பேருந்துகள்

தமிழ்நாடு போக்குவரத்துத்துறையின் சார்பில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நந்தனம், மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை நடந்தது.

இந்த கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஆர்கிர்லோன் குமார், போக்குவரத்து ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், போக்குவரத்துத்துறை செயலாளர் நிர்மல்ராஜ், போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக தனி அதிகாரி நெடுஞ்செழியன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன், பொது மேலாளர் (இயக்கம்) ஜெரோலின் லிஸ்பன் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் 2 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம் போல புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோன்று, கிளம்பாக்கம் சி.எம்.டி.ஏ. காலநிலை பூங்கா அருகில் இருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதேபோல மறைமலை நகரில் தற்காலிக பேருந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்.) காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

இது மட்டுமில்லாமல் முன்பதிவில்லா ரயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்.

ஆயுதபூஜையை முன்னிட்டு 15-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 191 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 6 ஆயிரத்து 199 பேருந்துகளும் சேர்த்து மொத்தமாக 4 நாட்களுக்கு 14 ஆயிரத்து 963 பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,191 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 9 ஆயிரத்து 86 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து மொத்தமாக 15 ஆயிரத்து 659 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.

இதனிடையே போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "ஆயுதபூஜையையொட்டி 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையிலும், தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரையும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள், மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள், என 14 முன்பதிவு மையங்கள் செயல்படும்.
மேலும், பயணிகள் முன்பதிவு செய்துகொள்ள நடைமுறையில் உள்ள டி.என்.எஸ்.டி.சி. செல்போன் செயலி மற்றும் www.tnstc.in என்ற இணைய தளம் மூலமாகவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+