ஜெயக்குமார் செய்த அதே சம்பவம்.. நயினார் நாகேந்திரன் தொடர்பாக ஆதாரத்துடன் விரைவில்.. திருச்சி சூர்யா
சென்னை: தேர்தல் நெருங்கும் நேரங்களில் அரசியல்வாதிகள் பற்றி ஆடியோ, வீடியோ மற்றும் சர்ச்சைகளை சிலர் வெளியிடுவது வழக்கமாக உள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்படியான சூழலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்த அதே சம்பவம் நயினார் நாகேந்திரன் சம்மந்தமாக ஆதாரத்துடன் விரைவில் வரப்போகிறது என்று திருச்சி சூர்யா வெளியிட்டிருக்கிறார். இது சமூக வலைதளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற போகிறது. இதில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும், அதிமுக பாஜக கூட்டணி ஒரு அணியாகவும், விஜய்யின் தவெக தனியாகவும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகின்றன. இதில் வேட்பாளர்கள் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அடுத்த 14 நாட்கள் தீவிர பிரச்சாரத்தில் கட்சிகள், தலைவர்கள் ஈடுபட இருக்கிறார்கள்.

பொதுவாக தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் பற்றி ஆடியோ, வீடியோ மற்றும் சர்ச்சைகளை சிலர் வெளியிடுவது வழக்கமாக உள்ளது. அண்மையில் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து விவகாரம் வெளியாகி பெரும் சர்ச்சையானது. இந்த விவாகரத்து வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் போட்டது.. ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென வெளியானது.. யாரோ எடுத்து லீக் செய்துவிட்டார்கள். இது தவெக தரப்பை கடும் அப்செட் ஆக்கியது.. விஜய்யை ஒரு நடிகையுடன் இணைத்து பேசியும் சிலர் பரப்பிவிட்டார்கள்.
அடுத்ததாக ஆ ராசாவின் ஆடியோ ஒன்று திடீரென வெளியாகியது. இதனை யூடியூபர் மாரிதாஸ் வெளியிட்டிருந்தார். இதுவும் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ ஒட்டி வெட்டி பரப்பப்பட்டதாக ஆ ராசா குற்றம்சாட்டியதுடன், மாரிதாஸ்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
அந்த வரிசையில் அடுத்ததாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்து புதிய ஆதாரம் வெளியிட போகிறேன் என்று திருச்சி சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்த அதே சம்பவம் நயினார் நாகேந்திரன் சம்மந்தமாக ஆதாரத்துடன் விரைவில் வரப்போகிறது என்று திருச்சி சூர்யா வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் வரப்போகும் இது என்னவாக இருக்கும் என்று விவாதங்கள் அதிகரித்துள்ளன.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications