சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழை மறந்த மாணவர்கள்! ஃபெயில்கள் அதிகரிப்பு- டிஜிபி சைலேந்திர பாபு

Google Oneindia Tamil News

சென்னை: நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தான் தமிழ் மொழிப்பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வேதனைத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Neet Exam பயம்.. மேலும் ஒரு மாணவன் தற்கொலை *Tamilnadu

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

    10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்திருக்கும் காவல்துறையில் பணியாற்றுபவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்காக உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்றது.

    நீட் தேர்வு தடைன்னு சும்மா மாணவர்களை ஏமாற்றாதீங்க! பாடங்களை தரம் உயர்த்துங்க: சொல்கிறார் ஜி.கே.வாசன் நீட் தேர்வு தடைன்னு சும்மா மாணவர்களை ஏமாற்றாதீங்க! பாடங்களை தரம் உயர்த்துங்க: சொல்கிறார் ஜி.கே.வாசன்

    நுழைவுத் தேர்வு

    நுழைவுத் தேர்வு

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தான் தமிழ் மொழிப்பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கவலைத் தெரிவித்தார். நுழைவுத் தேர்வுகளை மனதில் வைத்து தமிழ் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டிலும் மற்ற பாடங்களுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக கூறினார்.

    தமிழுக்கு டியூஷன்

    தமிழுக்கு டியூஷன்

    போகிற போக்கை பார்த்தால் இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ் கற்றுக்கொடுக்க டியூஷன் மையங்கள் சென்னையில் அதிகரிக்கக் கூடும் என்றும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் செலுத்தி படித்து வந்தால் எந்தவொரு பாடத்தையும் எளிதாக கற்கலாம் எனவும் கூறினார். மேலும், மாணவர்கள் திறமையையும், ஆற்றலையும் வளர்த்துக்கொண்டால் உயர்ந்த ஊதியத்தில் பெரிய பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்பை பெறலாம் என நம்பிக்கை அளித்தார் சைலேந்திர பாபு.

     47,000 பேர் தோல்வி

    47,000 பேர் தோல்வி

    அண்மையில் வெளிவந்த 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 47,000 பேர் தமிழில் தேர்ச்சி பெறாத நிலையில், டிஜிபி சைலேந்திர பாபு கூறியிருப்பது சற்று சிந்தித்து பார்க்க வேண்டிய ஒன்றாகும். ஒருவர் என்னதான் படித்து பல பட்டங்களை பெற்றாலும் மொழியறிவு என்பது மிக மிக அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    சங்கர் ஜிவால்

    சங்கர் ஜிவால்

    இதனிடையே உயர்கல்வி கருத்தரங்கத்தில் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்களும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தனர்.

    English summary
    Dgp Sylendra babu speech: நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தான் தமிழ் மொழிப்பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வேதனைத் தெரிவித்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X