Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உதட்டில் விஷம் தடவி.. "லாரி ஏற்றி ஜெ.வை கொல்ல பார்த்தாங்க.. ஓநாய் ஏன் அழுகிறது.. கேட்பது யார் பாருங்க

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து ஏர்போர்ட் மூர்த்தி ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஜெயலலிதா ஆட்சியில் இருக்கவே கூடாது, அதிமுக அழிய வேண்டும் என்று நினைத்த திமுகவினர், இன்று ஜெயலலிதா மரணத்தை பற்றி பேசுவது வியப்பாக இருக்கிறது.. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதைதான்" என்று ஏர்போர்ட் மூர்த்தி விமர்சித்துள்ளார்.

6 வருடங்கள் கழித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, கடந்த வாரம் சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஜெயலலிதா சுய நினைவுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும், மயக்கமடைந்த பிறகு, அனைத்து நிகழ்வுகளும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கை பகீரை கிளப்பிவிட்டுள்ளது.

 IAS ராதாகிருஷ்ணன்

IAS ராதாகிருஷ்ணன்

சசிகலா, சசிகலாவின் உறவினரான டாக்டர் கே.எஸ். சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.. இந்த அறிக்கையானது தமிழக அரசியல் களத்தில் நிறைய விவாதங்களை எழுப்பி வருகிறது. அந்த வகையில், எடப்பாடி + ஓபிஎஸ் பெயர்கள் ஏன் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.. மேலும் சிலரோ, சசிகலாவையும், அதிகாரிகளையும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்..

ராஜீவ்காந்தி

ராஜீவ்காந்தி

அந்தவகையில்,புரட்சி தமிழகம் தலைவர் அட்வகேட் ஏர்போர்ட் மூர்த்தி ஒரு பிரபல சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை குறித்து அவர் சொல்லி உள்ள கருத்துக்கள்தான் இவை: "ஜெயலலிதா மரணத்தில் நியாயம் கிடைக்க வேண்டும், அவர் இறப்பில் சதி இருந்தால் அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று யார் இப்போது சொல்லி கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், எல்லாம் திமுகதான்..

உதயசூரியன்

உதயசூரியன்

ஒரு காலத்தில் அம்மையாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடப்பதாக செய்திகள் கிளம்பியது.. மீனம்பாக்கத்தில் இருந்து அதாவது இன்னைக்கு இருக்கிற பழைய விமான நிலையம் எதிரில், லாரி ஏற்றி ஜெயலலிதாவின் காரை இடித்தார்கள்.. "திமுகவினர் என்னை கொல்ல முயற்சி செய்கிறார்கள்" என்று ஜெயலலிதாவே அப்போது சொன்னார்.. அந்த முயற்சி உண்மையா? பொய்யா என்பது ஒருபக்கம் இருந்தாலும், அப்படி காரில் மோதிய அந்த லாரியில் "உதயசூரியன்" படம் வரையப்பட்டிருந்தது என்றும், திமுகவினர் என்னை கொல்ல முயற்சிப்பதாகவும் ஜெயலலிதாவே ஓபனாக சொன்னார்..

 லாரி + உதயசூரியன்

லாரி + உதயசூரியன்

அப்படிப்பட்டவர்கள்தான் இன்றைக்கு ஜெ.மரணத்தில் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்கிறார்கள்.. இவங்க என்னமோ, அந்தம்மா உயிருடன் இருந்தபோது, பல நூறு காலம் அவர் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட மாதிரியும், இன்னைக்கு அந்தம்மா மரண சதியை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை தர போவது போலவும் சொல்லி வருகிறார்கள்.. இந்த மரணத்தில் ஏதோ நடந்திருக்கிறது, ஓபிஎஸ் இதில் ஏதோ செய்திருக்கிறார், சசிகலா ஏதோ செய்திருக்கிறார் என்று நினைத்துதான், எடப்பாடி ஆணையம் அன்று போட்டார்.. ஆனால், குறிப்பிட்ட சிலரை மட்டும் சொல்லி விசாரிக்க வேண்டும் என்கிறது ஆணையம்.

 உதட்டில் விஷம்

உதட்டில் விஷம்

இதை சொல்றதுக்கா ஒரு ஆணையம்? மக்கள் பணத்தை எடுத்து செலவு செய்த இந்த ஆணையம், இத்தனை வருஷமாக என்னதான் செய்து கொண்டிருந்தது? கடந்தகால வரலாறை எடுத்து கொண்டால், ராஜீவ்காந்தியை குண்டு வைத்து கொன்றார்கள்.. ஆனால், எந்த காங்கிரஸுக்காரனாவது, ஐயையோ, ராஜீவை கொன்றுவிட்டார்கள் என்று ஒப்பாரி வைக்கிறார்களா? யாராவது ராஜீவ் பற்றி பேசுகிறார்களா? எப்போதாவது தேவை ஏற்பட்டால், தேர்தல் நடந்தால், அல்லது ராஜீவ் காந்தி நினைவுதினங்களில் மட்டும் அந்த நிகழ்வை பேசுவார்கள்.. இதுதான் இயல்பு நிலை..

 மோரில் நஞ்சு

மோரில் நஞ்சு

இப்படித்தான் எம்ஜிஆரை சொன்னார்கள்.. மோரில் விஷம் வைத்து கொடுத்து கொன்றார்கள் என்று சொன்னது ஒரு தரப்பு.. இன்னொரு தரப்போ, உதட்டில் விஷம் தடவி, அதை எம்ஜிஆருக்கு தந்ததால்தான் இப்படி ஒரு நிலைமை என்றார்கள்.. ஆக, தமிழக அரசியலில், அரசியல்வாதிகளின் இறப்பு என்பது சிறிது நாள் பேசப்படும்.. அதுக்கப்பறம் மக்களால் மறக்கப்பட்டுவிடும்.. உதயசூரியனா? இலையா? என்றுதான் தமிழக அரசியல் பார்க்கப்பட்டு வருகிறதே தவிர, இவர்களுக்காகத்தான் அரசியல், இவர்கள் இல்லையென்றால் எதுவுமே இல்லை என்றெல்லாம் இங்கு கிடையாது..

 ஆடு நனைகிறதே

ஆடு நனைகிறதே

ஜெயலலிதா மரணத்தில் அரசியல் லாபம் ஏதாவது கிடைக்குமா என்றுதான் பார்க்கிறார்கள்.. ஜெயலலிதாவை பொறுத்தவரை சிறப்பான ஆட்சியை தந்தார்.. லியோனி, பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர் போன்றவர்கள் வன்மமாக பேசி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், அம்மா இருக்கும்போது, இப்படி ஒரு பேச்சை அமைச்சர்கள் யாராவது அன்று பேசினார்களா? ஜெயலலிதா ஆட்சியில் இருக்கவே கூடாது, அதிமுக அழிய வேண்டும் என்று நினைத்த திமுகவினர், இன்று ஜெயலலிதா மரணத்தை பற்றி பேசுவது வியப்பாக இருக்கிறது.. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிற கதைதான்.. ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.. இது தமிழகத்துக்கு நல்லதல்ல..

 ஓநாய் அழுகிறது

ஓநாய் அழுகிறது

அந்தம்மா யாரையுமே கடைசிவரை நம்பவில்லை.. சசிகலாவை மட்டும்தான் கூடவே வைத்திருந்தார்.. அதுக்காக அவர்மீது சந்தேகப்படக்கூடாது.. அப்படி இவர்கள் மீதெல்லாம் சந்தேகம் இருந்தால், அதிமுகவுக்கு யாருமே ஓட்டு போட்டிருக்க மாட்டடார்கள்.. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் என்பது வெறும் 3 சதவீதம்தான்.. இத்தனைக்கும் டிடிவி தனியாக நின்றார், எடப்பாடி தனியாக நின்றார். அப்படி இருந்துமே இவ்வளவுதான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வாக்கு சதவீதத்தில் வித்தியாசம் காட்ட முடிந்திருக்கிறது.. அதிமுகவை வாக்கு வங்கியை எதை கொண்டும் அசைக்க முடியாது" என்றார்.

அப்பட்டம்

அப்பட்டம்

தொடர்ந்து அவர் பேசும்போது, "அப்பல்லோவில் சிகிச்சை எடுத்த போட்டோவை ஏன் வெளியே விடவில்லை? எம்ஜிஆர் சிகிச்சை போட்டோ மட்டும் வெளிவந்ததே என்று கேட்கிறார்கள்.. சாதாரண நடிகையாக இருந்தாலும்கூட, மேக்கப் இல்லாமல் போட்டோ வெளிவந்தால் இமேஜ் உடையும் என்று நினைப்பார்கள்.. அப்படி இருக்கும்போது, மிகப்பெரிய ஆளுமையான ஜெயலலிதா, அவருடைய போட்டோவை வெளிவருவதை விரும்பவில்லை என்றே இதன்மூலம் தெரிகிறது.. அவர் அனுமதியில்லாமல் போட்டோ எடுத்து வெளியிட முடியாது.. முதலில் இந்த விஷயத்தில் பொய் சொல்ல வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை. வேண்டுமானால் சில காரணங்களுக்காக உண்மையை மறைத்திருக்கலாம்.

டேமேஜ் இமேஜ்

டேமேஜ் இமேஜ்

அதுக்காக, சிகிச்சை செய்வதில் யாருக்கு என்ன தவறு இருந்துவிட போகிறது? தமிழ்நாட்டில் இருக்கும் டாக்டர்கள் தான் தவறு செய்துவிட்டார்கள் என்றால், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் வந்தார்களே.. அவர்களும் பொய் சொல்கிறார்களா? மத்திய அரசும் பொய் சொல்கிறதா? அரசியலுக்கு இந்த மரணத்தை பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள்.. இதை வைத்து அதிமுகவை தமிழர்களிடம் இருந்து அப்புறப்படுத்திவிடலாமா? இவர்கள் எல்லாம் கொலைகாரர்கள், அந்த கட்சியின் தலைவியையே, இவர்கள் ஒன்று சேர்ந்து கொன்னுட்டாங்க.. அப்படின்னு ஒரு இமேஜை உருவாக்க திமுக முயல்கிறது.. அதெல்லாம் எதுவும் இங்கே எடுபடாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+