பட்ட பாடெல்லாம் போச்சே.. "அந்த" கடைசி அஸ்திரம் எடுக்கப்படுகிறதா.. எடப்பாடிக்கு இனிதான் சிக்கலே?

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக ஹைகோர்ட் தீர்ப்பு வந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோர்ட் தீர்ப்பு வந்துள்ள நிலையில், அடுத்து ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.. அத்துடன் எடப்பாடி டீம் தெம்பில் காணப்படுகிறது.

Recommended Video

    ADMK தலைமை அலுவலகத்தில் OPS - EPS ஆதரவாளர்கள் இடையே மோதல்... ராயப்பேட்டையில் பரபரப்பு

    ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், இன்று காலை 9.15 மணிக்கு அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது.

    அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும் கூறப்படுகிறது.

     எடப்பாடி நம்பிக்கை

    எடப்பாடி நம்பிக்கை

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓபிஎஸ் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு நடத்த தடையில்லை என்று சுப்ரீம்கோர்ட்டும் தீர்ப்பளித்திருந்தது.. இந்நிலையில், இந்த வழக்கில் விவாதம் முடிந்ததை தொடர்ந்து, இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே உத்தரவு வந்துள்ளது.. பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று கோர்ட் தெரிவித்துள்ளது.

     சஸ்பென்ஸ்

    சஸ்பென்ஸ்

    எனினும், இந்த வழக்கல் எத்தகைய தீர்ப்பு வரப்போகிறது? என்ற சஸ்பென்ஸ் இறுதிநிமிடம் வரை நீடித்தது.. இரு கட்சிகளிலுமே பதற்றம் நிலவியது.. இரு தரப்பிலுமே வன்முறைகள், அடிதடிகள் வெடித்தன.. ஆனால், எடப்பாடி பழனிசாமி மட்டும் தெம்பாக இருந்தாராம்.. தனக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும் என்றும், அதீத நம்பிக்கையும் இருந்ததாம்.. அதற்கு காரணம், இந்த பொதுக்குழுவுக்கு தடை கேட்டு பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் கடந்த நாட்களுக்கு முன்பேயே விசாரணைக்கு வந்தது.

     ஸ்டிராங் பாயிண்ட்ஸ்

    ஸ்டிராங் பாயிண்ட்ஸ்

    அப்போது, கட்சி விவகாரத்தில் கோர்ட் தலையிட முடியாது என்று சொல்லிவிட்டது.. பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியதும் கட்சிதான், அதனால், நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்... அந்த நீதிபதி முன்னிலையிலேயே திரும்பவும் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வரப்போவதாக அறிவிப்பு வெளியானது.. அதனால், தங்கள் தரப்பில், கடந்த வழக்கை விட வலிமையான வாதங்களை முன் வைத்திருப்பதாக எடப்பாடி தரப்பு மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனராம்.

     எம்ஜிஆர்

    எம்ஜிஆர்

    தலையிட முடியாது என்று கூறிய அதே நீதிபதி இன்றைய தினம், பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது, எடப்பாடி தரப்பின் மற்றொரு வெற்றியாக பார்க்கப்படுகிறது.. இனி பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும்.. திட்டமிட்டபடி எடப்பாடிக்கு தற்காலிக பொதுச்செயலாளர் பதவியை தரக்கூடும்.. திட்டமிட்டபடி, ஓபிஎஸ்ஸின் பதவிகள் பறிக்கப்படும் என்றே தெரிகிறது.. சுப்ரீம்கோர்ட் வரை சென்று, சறுக்கலை சந்தித்துவிட்டதால், ஓபிஎஸ் இனி என்ன செய்வார்? என்ற அடுத்த எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

     சசிகலா

    சசிகலா

    ஓபிஎஸ் நம்பி இருந்தது 2 விஷயங்களைதான்.. ஒன்று சட்டரீதியான முடிவு, மற்றொன்று சசிகலா.. முதல் விஷயத்தில் தோல்வியை தழுவிய நிலையில், சசிகலா என்ற அஸ்திரத்தை ஓபிஎஸ் இனி கையில் எடுக்கலாம் என்கிறார்கள்.. மற்றொரு பக்கம், பாஜக ஆதரவுடன், எடப்பாடிக்கு நெருக்கடி கூடலாம் என்று சொல்கிறார்கள்.. எனினும், இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்து முன்கூட்டியே, சரியான பதிலடி நடவடிக்கையை எடப்பாடி தரப்பு ஏற்கனவே திட்டமிட்டு வருகிறதாம்.. ஆக மொத்தம், இரு தரப்பு பூசல்கள், அப்பட்டமாக நடந்து வருவது, எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியின் மானம் பறந்து கொண்டிருப்பது, தொண்டர்களுக்கு வேதனையை தந்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+