Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சமாதானம்'.. சீனியர்களுக்கு அலெர்ட்.. அதிமுக கூட்டத்தில் எடப்பாடி கொடுத்த அட்வைஸ்.. பரபர தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன என்பது குறித்து சில தகவல்கள் அதிமுக வட்டாரத்தில் உலவி வருகின்றன.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது பற்றி மட்டுமே ஆலோசித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

எனினும், இந்தக் கூட்டத்திலும் பாஜக பற்றி எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகளுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கேபி முனுசாமி பங்கேற்காதது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் கேபி முனுசாமி பங்கேற்றார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கும் நிலையில், நேற்று மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாது, தலைமைக் கழக நிர்வாகிகள், ஈபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். சமீபத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கேபி முனுசாமி பங்கேற்காதது, அவர் ஓபிஎஸ் அணிக்கு தாவப் போகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தது.

முனுசாமி சமாதானம்

முனுசாமி சமாதானம்

சமீபத்தில் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது வேலுமணியையும், சி.வி.சண்முகத்தையும் அழைத்துச் சென்றிருந்தார் எடப்பாடி பழனிசாமி. சி.வி.சண்முகத்தின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை முனுசாமி விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. சமூக ரீதியில் சி.வி.சண்முகம் தன்னை ஓவர்டேக் செய்வதை விரும்பாத தால் தான் அவர் கடந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்பட்டது. இதையடுத்து, ஈபிஎஸ்ஸே அழைத்து பேசியதாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் கேபி முனுசாமி சிரித்த முகத்தோடு பங்கேற்றார்.

சிரித்தபடியே எடப்பாடி

சிரித்தபடியே எடப்பாடி

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரம், சட்டமன்ற இருக்கை மாற்றும் கோரிக்கை, சட்டமன்ற கூட்டத்தொடரில் என்னென்ன பிரச்சனைகளை முன்னிலைப்படுத்துவது ஆகியவை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, அது தொடர்பாக என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்காமலேயே சிரித்தபடியே காரில் ஏறிச் சென்றார் எடப்பாடி பழனிசாமி.

ஜெயக்குமார் சொன்னது

ஜெயக்குமார் சொன்னது

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் விவகாரம் பற்றி இன்று விவாதிக்கவில்லை. எங்கள் பக்கம் 63 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில், சட்டசபை விதிகளை பேரவைத் தலைவர் கடைபிடிக்க வேண்டும். சபாநாயகரின் நடவடிக்கையைப் பொறுத்துத்தான் சட்டமன்றக் கட்சி முடிவை எடுக்கும். இப்போதைக்கு அதுபற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை, அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

புறக்கணிக்கும் சூழல் ஏற்படலாம்

புறக்கணிக்கும் சூழல் ஏற்படலாம்

எனினும், அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, சட்டமன்ற கூட்டத்தொடர் பற்றியும், பாஜக பற்றியும் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாக தகவல்களைக் கசிய விடுகின்றனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில், சபாநாயகர் முடிவு நமக்கு சாதகமாக இருக்காது போல் தோன்றுகிறது என பேச்சைத் தொடங்கியுள்ளனர். நிலைமை எதிராக இருந்தால், நாம் சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிக்க வேண்டிய சூழல் இருக்கும் என விவாதித்ததாக கூறப்படுகிறது.

கெட்ட பெயர் வேண்டாம்

கெட்ட பெயர் வேண்டாம்

உட்கட்சிப் பிரச்சனையால் சட்டமன்றத்தை நாம் புறக்கணிப்பதாக ஆளுங்கட்சியினர் விமர்சிப்பதற்கு நாம் இடம்கொடுத்துவிடக் கூடாது. அது மக்கள் மத்தியில் நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். அரசின் சொத்து வரி, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிரான வகையிலும் நாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக இருக்க வேண்டும். குறிப்பாக, பிரஸ் மீட்டில் பேசும்போது கவனமாக பேச வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அட்வைஸ் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

விட்டுப் பிடிப்போம்

விட்டுப் பிடிப்போம்

மேலும், பாஜகவை விட்டுப் பிடிப்பது என்ற முடிவில் இருக்கிறோம். அதற்காக, தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திவிடக் கூடாது. பாஜகவை விமர்சிக்கும் போக்கை தவிர்த்துவிடுங்கள், நம் அத்தனை நடவடிக்கைகளும் டெல்லிக்குப் போகிறது. டெல்லியின் அசைவுகள் உறுதியாகும் வரை இந்த விஷயத்தில் கொஞ்சம் அமைதி காக்கலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி, சீனியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈபிஎஸ் டீமின் சில மூவ்கள்

ஈபிஎஸ் டீமின் சில மூவ்கள்

சமீபத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, தேசிய கட்சியாக இருந்தாலும் திமுகவாக இருந்தாலும் தனித்துப் போட்டியிட தயாரா எனக் கேட்டிருந்தார். முன்னதாக, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக தனித்துப் போட்டியிட தயார் என்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருந்தார். அதேபோல, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உள்ள தீவிர ஆதரவாளரும், எம்.எல்.ஏவுமான கேபி முனுசாமி, பாஜக அமைச்சர்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதை வெளிப்படையாகவே விமர்சித்தார்.

அலெர்ட்

அலெர்ட்

இப்படி தொடர்ந்து ஈபிஎஸ் டீம் சில மூவ்கள் பாஜகவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. தமிழக பாஜக தலைவர்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றி விடும் சமிக்ஞைகளாகவே இது கருதப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கருத்துகளால் பாஜக தலைமை கண் வைத்துள்ளதால், பாஜகவை நேரடியாக விமர்சிக்க வேண்டாம் என ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+