2 மேட்டர்கள்.. 2 சம்பவங்கள்.. எடப்பாடிக்கு பாஜக தந்த "சைலண்ட்" மெசேஜ்.. யூடர்ன் எடுப்பாரா பழனிசாமி?
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு 2 விதமான தகவல்களால், ஓபிஎஸ் தரப்பில் இருந்து புது தலைவலி ஆரம்பமாகி உள்ளதாம்.
ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை எடப்பாடி அளவுக்கு ஸ்டிராங் இல்லை என்ற ஒரு பேச்சு உள்ளது.. எதிலும் உறுதிப்பாடு இல்லாததும், ஒரு விஷயத்திலும் நிலையான முடிவு எடுக்காததும், விமர்சனங்களாக உள்ளன.
அதேபோல, பாஜக விஷயத்திலும் சரி, மத்திய அரசை பிமர்சிப்பதிலும் சரி, ஓபிஎஸ் அவ்வளவாக ஸ்டிராங் இல்லை என்ற சலசலப்பும் நீண்ட காலமாகவே உள்ளது.
இருக்குற தலைவலி போதாதுன்னு.. எடப்பாடிக்கு

டென்ஷன்
இதனிடையே, திமுகவிடமும் இதே மென்மைப்போக்கை கடைப்பிடித்து வருவதுடன், சட்டசபையில் கருணாநிதியை அடிக்கடி பாராட்டி வந்ததும், எடப்பாடி தரப்பை கடுப்பாக்கி விட்டதாக சொன்னார்கள்.. எல்லாவற்றிற்கும் மேலாக, ஓபிஎஸ் மகன் தனிமையில் சந்தித்து பாராட்டியதுடன், வாழ்த்து சொல்லி, பரிசும் தந்ததுதான், பெரும்பாலான அதிமுகவினரை டென்ஷனாக்கிவிட்டதாக தகவல்கள் வெடித்தன.. ஓபிஆர் ஸ்டாலினை சந்தித்ததை வைத்தே, எடப்பாடியின் ஒற்றை தலைமை அரசியலும் ஆரம்பமானது..

ரவீந்திரநாத்
இதற்கு ஓபிஎஸ் தரப்பிலும் சில கேள்விகளை முன்வைத்தார்கள்.. "ஒற்றை தலைமை பிரச்சனை வந்துவிட்டதாலேயே, முதல்வரை ரவீந்திரநாத் சந்தித்தாரா? அல்லது ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்ததால், ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியதா? ஒரு எம்பி முதல்வரை நேரில் சந்தித்தார் என்பதைதவிர, வேறு என்ன இதில் காரணம் உள்ளது? ரவீந்திரநாத் மட்டும்தான் முதல்வரை பாராட்டினாரா? ஏன் சட்டசபையில் செங்கோட்டையன் பாராட்டவில்லையா? செல்லூர் ராஜு பாராட்டவில்லையா?

விஜயபாஸ்கர்
அவ்வளவு ஏன்? எடப்பாடியின் ஆதரவாளரான, ராஜேந்திரபாலாஜி பாராட்டவில்லையா? இவர்கள் மட்டும் தமிழக அரசையும், முதல்வரையும் புகழலாம்.. ஒரு எம்பி, தமிழக அரசை பாராட்டக்கூடாதா? அங்கே அண்ணாமலை, திமுக ஊழல் பற்றி லிஸ்ட் வெளியிட்டு புட்டு புட்டு வைத்தாரே.. திமுக அரசின் சுகாதாரத்துறை மீதும், பத்திரப்பதிவு துறை மீதும் தானே புகார்களை சொன்னார்? இதற்கு எடப்பாடி தரப்பில் வந்ததா? விஜயபாஸ்கர், கேசி வீரமணியாவது, வாயை திறந்தார்களா? கமுக்கமாக இருக்க என்ன காரணம்? நாங்கள் கேட்க நினைத்தால் எவ்வளவோ கேட்கலாம் என்று அடுக்கடுக்காக அடுக்கினார்கள்.

லெட்டர் எழுதிய பழனிசாமி
ஆனாலும், ஓபிஆரை கட்சியில் இருந்து நீக்கம் செய்தது எடப்பாடி டீம்.. மேலும், ரவீந்திரநாத்தை, அதிமுக உறுப்பினராகவே கருதக்கூடாது என்று கூறி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதினார்... இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்கக் கூடாது என்று ஓபிஎஸ்ஸும் பின்னாடியே பதில் எழுதி கடிதம் எழுதினாலும், இந்த ரிசல்ட் என்ன ஆனது என்று தெரியாமலேயே இருந்தது.. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதம் நிராகரிக்கப்பட்டதாக சொன்னார்..

ரவீந்திரநாத்
ஆனால், அது உறுதியான தகவலா என்று தெரியாமல் இருந்த நிலையில்தான், டெல்லியே அதை உறுதிப்படுத்தி விட்டது. தற்போது நடந்து வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் ஓபி ரவீந்திரநாத் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். கடந்த வாரம் லோக்சபாவில், "குடும்ப வழக்குகளை விரைந்து முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்" என்று கடந்த வாரம் லோக்சபாவில் ரவீந்திரநாத் வலியுறுத்தவும் செய்தார்...

சன்சத் டிவி
எனினும், சுயேச்சையான எம்பியாக இவர் உள்ளாரோ என்ற சந்தேகமும் எழுந்த நிலையில், அதையும் டெல்லி கன்பார்ம் செய்துவிட்டது.. நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான "சன்சத்" டிவியில் அதிமுக எம்பி என்றே பெயரிடப்பட்டு, ஓபிஆர் பேச்சை ஒளிபரப்பிவிட்டடார்கள்... ஆக, எடப்பாடி எழுதிய கடிதம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதுடன், அதிமுக எம்பியாகவே ஓபிஆர் தொடர்கிறார் என்பதும் உறுதியாகி உள்ளது.. ஏற்கனவே ஓபிஎஸ் விவகாரங்களில் டெல்லி கை கொடுத்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவுகளும் அவ்வப்போது கை கொடுத்து வரும் நிலையில், இந்த ஓபிஆர் விவகாரமும் மகிழ்ச்சியை தந்து வருகிறது..

ராஜன் செல்லப்பா
4 நாட்களுக்கு முன்பு, ராஜன் செல்லப்பா ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், தேனி எம்பி ரவீந்திரநாத், தான் ஒரு அதிமுக எம்பி என்று அவரே சொல்லிக் கொள்கிறார்.. ஆனால், நாடாளுமன்றத்தில் இருந்து இது தொடர்பாக எவ்வித பதிலும் வரவில்லை. அவர் சுயேச்சையான எம்பியாக இருக்கலாம். அதிமுக எம்பியாக இருந்த சமயத்திலேயே அவர் சுயேச்சை எம்பி போலத்தான் செயல்பட்டார். என்றைக்கும் அவர் அதிமுக கொள்கைகளுக்காகக் குரல் கொடுத்ததே இல்லை' என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசியிருநத் நிலையில், அதற்கும் இப்போது பதில் கிடைத்துவிட்டதாகவே தெரிகிறது..!

டபுள் கணக்கு
அதுமட்டுமல்ல, டெல்லி சப்போர்ட் உள்ள காரணத்தை காட்டியே, எடப்பாடி டீமில் உள்ள முக்கிய நபர்களுக்கும் வலையை விரித்துள்ளாராம் ஓபிஎஸ்.. மேலும், பதவி எதுவும் இல்லாமல் இருக்கும் அதிமுகவினரை வரவேற்று, அவர்களுக்கு பதவிகளை வழங்கவும் முடிவு செய்துள்ளாராம்.. அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகளை நியமிக்க கட்சி தொண்டர்களை தேர்வு செய்யுமாறு, மாவட்ட செயலாளர்களுக்கு ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளாராம்..!
Recommended Video

வைத்திலிங்கம்
இப்படி ஒரு ஐடியாவை ஓபிஎஸ்ஸுக்கு தந்ததே வைத்திலிங்கம்தானாம்.. இதற்கு காரணமும் இருக்கிறது.. அதிமுகவில் போஸ்டிங் தராமல் ஒதுக்கப்பட்டிருப்பவர்கள், அதிருப்தியாளர்களுக்கு பதவி தருவதால், எடப்பாடிக்கு எதிராகவும் அவர்கள் களமாடுவார்கள் மற்றும் தன்னுடைய மெஜாரிட்டியை நிரூபிக்கவும் இவர்கள் பக்கபலமாக இருப்பார்கள் என்றும் டபுள் கணக்கு உள்ளதாம்.. அதன்படியே, டீமை இறக்கி, அதிருப்தியாளர்களை திரட்டும் வேலையில் இறங்கி வருகிறாராம் ஓபிஎஸ்..!