சினிமா போல் அரசியலில் ஜெயிக்க முடியாது.. படிப்படியாக தான் வரமுடியும்.. எடப்பாடி பகிர்ந்த ரகசியம்!
சென்னை: சினிமாவில் நுழைவது எவ்வளவு கடினமோ, அரசியலில் நுழைவதும் கடினம் தான் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொண்டு நிறுவன தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், என்னை பொறுத்தவரை திரைப்படத்திற்கும் எனக்கும் மிக தூரம். நான் சினிமா பார்த்து 25 ஆண்டுகள் ஆகிறது. ஆகவே திரைப்பட நடிகர், நடிகைகள் பற்றி தெரியாது. அரசியலும், சினிமாவும் ஒன்றாக கலந்திருக்கிறது.

அரசியல் எளிதல்ல
தமிழ்நாட்டில் சாமானியர் முதலமைச்சராக வருவது எளிதல்ல. ஏனென்றால் சினிமாவுக்கு வருவது மிகவும் கடினம்.அதேபோல் தான் அரசியலும். திரைப்படத்தில் ஒருவர் எப்படி ஒருவர் முத்திரை பதிக்கிறாரோ, அதேபோல் அரசியலிலும் அனைவராலும் முத்திரை பதிக்க முடியாது. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

நடிகர்களின் வெற்றி
எம்ஜிஆர் ஏழைகளின் கொடையாக பிறந்தவர். அவரது காலத்தில் ஏழைகளின் வாழ்வியல், கல்வி, பொருளாதாரம் உயர்ந்தது. திரைத்துறைக்கும், அதிமுகவுக்கு பெரிய தொடர்பு உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள். அரசியலில் உழைப்பது கடினம். சினிமாவில் எளிதாக வந்துவிடலாம். திரைத்துறையில் இயக்குநர்களின் உதவியால் நடிகர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் அரசியல் அப்படியல்ல. ஒவ்வொரு படியாக ஏரிதான் வர முடியும்.

அரசியல் பாதை
தனி மனிதராக எதை வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் செயல்பாடுகள் அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இருக்க வேண்டும். 34 வயதிலேயே சட்டமன்றத்தில் இருந்தவன் நான். எனது தொகுதியில் உள்ள அனைவருக்கும் அப்போதே என்னை தெரியும். அரசியல் பயணம் என்பது முள்ளும், பள்ளமும் நிறைந்த பாதை.

சினிமாவும் அதிமுகவும்
அரசியலில் கடந்த காலம் என்பது வேறு. ஆனால் இன்று தகவல் தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் வளர்ந்துள்ளது. அதனால் அனைத்து விவகாரங்களிலும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். இயக்குநர் ஆர்கே செல்வமணி ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் தொழிலாளர்களின் நலனுக்காகவே சந்தித்துள்ளார். சொந்த நலனுக்காக சந்தித்ததே இல்லை. அதிமுக ஆட்சியில் திரைத்துறைக்கு பல உதவிகள் செய்துள்ளோம். ஏனென்றால் இருபெரும் தலைவர்கள் திரைத்துறையில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவித்தார்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications