இந்து மதத்தை புண்படுத்துகிறார் லியோனி.. பாடநூல் நிறுவனத்தில் இருந்து நீக்குக.. எச்.ராஜா ஆவேசம்!
சென்னை: இந்து மதத்தை இழிவாகப் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஆசிரியர், பட்டிமன்ற பேச்சாளர், சினிமா நடிகர் என்று புகழ் பெற்றவர் திண்டுக்கல் ஐ.லியோனி. இவர் இப்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக உள்ளார். இவரது பேச்சுகள் எப்போதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாவது வழக்கம். அந்த வகையில், திருமாவளவன் 60வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த விழாவில், லியோனியும் பங்கேற்று பேசினார்.
அதில், ஒரு சிலர் பிறந்த நாள் விழாவில் ஐயர்களை வைத்து யாகம் நடத்துவார்கள். அந்த யாகத்தில் அரை மூட்டை விறகை எடுத்து போடுவார்கள். அதேபோல் கோவிலில் பொங்கல் வாங்கி தின்றுவிட்டு ஒருவர் கையை துடைக்க துணி எடுத்து வரவில்லை என்று சுவற்றில் துடைத்து விட்டு கையை முகர்ந்து பார்த்து உள்ளார்.

லியோனி பேச்சு
அதை 15க்கும் மேற்பட்டோர் வேடிக்கை பார்த்து அங்கே ஏதோ ஒரு சாமி இருக்குடா என்று வணங்குகிறான். நாம் எல்லாரும் விட்டுட்டோமே என்று அனைவரும் வரிசையில் நின்று அந்த இடத்தை தொட்டு கும்பிடுவார்கள். இரண்டு மாதம் கழித்து ஆயிரம் பேர் தொட்டு கும்பிடுவார்கள். ஒரு வருடம் கழித்து அந்த இடத்தில் கும்பாபிஷேகமே நடக்கும் என்று பேசினார்.

போலீசில் புகார்
இதுகுறித்து பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் பிரபு, செயலாளர் டில்லி பாபு ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், திண்டுக்கல் லியோனி மீது புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில், இந்துக்கள் மனது மிகவும் வேதனை அடையும் அளவிற்கு லியோனி பேசியுள்ளார். யாகம் வளர்க்கும் முறை மிகவும் நேர்த்தியானது.

பதவி நீக்கம் செய்க
சக்தி வாய்ந்ததாக இந்துக்கள் கருதுகின்றனர். கல்லையும் கடவுளாக வணங்கும் ஒரே மதம் இந்து மதம். இந்துக்களின் மனதை மிகவும் கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தும் வகையில் லியோனி பேசியுள்ளார். எனவே அவர் வகிக்கும் பாட நூல் கழக தலைவர் பதவியை சட்டப்படி நீக்க ஆவன செய்ய வேண்டும் என்று புகாரளிக்கப்பட்டுள்ளது.

எச்.ராஜா ட்வீட்
இதுகுறித்து தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்து மதத்தை இழிவாகப் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனியின் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக பேர்வழி பாடநூல் நிறுவனத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications