சாகலாம்னு நினைச்சேன்..ஆனால் அதுக்குள்ள! பகீர் வாக்குமூலம் அளித்த சதீஷ்! மோகன் ஜி என்ன சொன்னார்?
சென்னை : சென்னையில் கல்லூரி மாணவி சத்யப்பிரியா கொலை வழக்கு தொடர்பாக கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீஷ் தற்கொலை செய்ய நினைத்ததாக வாக்குமூலம் அளித்த நிலையில், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சதீஷுக்கும் சிலர் முட்டுக் கொடுப்பார்கள் என இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார்.
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராமலட்சுமி இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சத்யா(20), தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்.இரண்டாமாண்டு படித்து வந்தார்
நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையம் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த ஆலந்தூர் ராஜா தெருவை சேர்ந்த சதீஷ் என்பவர் சத்யாவிடம் வாக்குவாதம் செய்து பின்னர் கடற்கரை செல்லும் மின்சார ரயிலில் தள்ளிவிட்டு தப்பி ஓடி விட்டார்.

கல்லூரி மாணவி
இதில் கல்லூரி மாணவி தலை துண்டிக்கப்பட்ட நிலையில், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து வந்த மாம்பலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து கொலை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை தேடி வந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து சதீஷை தேடிவந்தனர்.

சதீஷ் கைது
இந்நிலையில் சதீஷ் துரைப்பாக்கம் அருகே கைது செய்யப்பட்டு தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே சத்யாவின் தந்தை மாணிக்கம் மகள் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மாணிக்கம் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியானது. இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

பரபர வாக்குமூலம்
இதனிடையே விசாரணை நிறைவடைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷை சிலர் சூழ்ந்து கொண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "சத்யாவை கொலைசெய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முற்பட்டேன். அதற்குள் என்னை பிடிக்க பொதுமக்கள் வந்துவிட்டனர். பிடித்தால் என்னை அடிப்பார்கள் என அங்கிருந்து ஓடிவிட்டேன்.அதனால் குப்பை வண்டியில் அடிப்பட்டு சாவதற்காக துரைப்பாக்கம் சென்றேன். அங்கிருந்து எனது நண்பருக்கு குப்பை வண்டியில் விழுந்து சாவப்போவதாக மெசேஜ் அனுப்பினேன்" என கூறியதாக தகவல் வெளியானது.

கூடுதல் பாதுகாப்பு
இதனைத் தொடர்ந்து சதீஷ் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் சென்னை அருகேயுள்ள புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தான் மாணவி சத்யப்பிரியா கொலை வழக்கு புழல் சிறையில் அடைக்கப்பட்ட சதீஷுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொலை நடந்த போதே தற்கொலை செய்ய நினைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்த நிலையில், புழல் சிறை நிர்வாகம் 24 மணி நேரமும் சதீஷை கண்காணிப்பதற்காக காவலர்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மோகன் ஜி
சதீஷுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் திரெளபதி, பழைய வண்ணாரபேட்டை இயக்குனர் மோகன் ஜி சத்யா கொலை தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,ரயிலுக்கு காத்திருக்கும் பெண்ணை காதலிக்க மறுத்ததால் ஓடும் ரயிலில் தள்ளி கொலை. இரவே மகள் இறந்த துயரத்தால் தந்தை விஷம் குடித்து தற்கொலை. தள்ளி விட்டவனை கைது செய்து விசாரித்து ஜெயிலுக்கு அனுப்பி அவனுக்காக பெயிலும் வாங்குவார்கள். அடுத்த வாரமே இவனுக்கு சிலர் முட்டு கொடுப்பார்கள். வாழ்க நம் சட்டம்.." என பதிவிட்டுள்ளார்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications