V.Sekar: 'விரலுக்கேத்த வீக்கம்' பட இயக்குநர் வி.சேகர் கவலைக்கிடம்! மகன் கண்ணீர் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் வி.சேகருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் காரல்மார்க்ஸ் சேகர் தெரிவித்துள்ளார்.

V Sekar

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: என் தந்தையும், மக்கள் இயக்குநரும், குடும்ப இயக்குநரும், திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரிப்பாளருமான வி.சேகர் தற்போது தன் உயிருக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்.

அவர் விரைவில் உடல் நலம் பெற அன்பின் ஒளியாக ஒரு தீபம் ஏற்றி இறைவனை மனமார வேண்டிக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார்.

வி.சேகருக்கு 4 நாட்களுக்கு முன்பு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு மூளைக்கு செல்ல வேம்டிய ரத்தம் செல்லாமல் இருப்பதால் அவர் கண்களை மூடிய நிலையிலேயே இருக்கிறாராம்.

அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவர் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்", "விரலுக்கேத்த வீக்கம்", "வரவு எட்டனா செலவு பத்தனா", "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை", "காலம் மாறி போச்சு" போன்ற குடும்ப பாங்கான படங்களை இயக்கியுள்ளார்.

வடிவேலையும் விவேக்கையும் ஒரே படத்தில் நடிக்க வைத்த பெருமை வி.சேகருக்கு உண்டு. 1980, 90களில் குடும்பத்தில் நடக்கும் போராட்டங்கள், சண்டை, சச்சரவுகள், காதல் உள்ளிட்ட அனைத்து ரசங்களையும் சேர்த்து குடும்பங்கள் போற்றும் படத்தை எடுத்துள்ளார். இவரது படத்தில் ஆபாசத்திற்கு இடம் இருக்காது என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்று இந்த படங்களை ரசித்தனர்.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பத் தலைவன் படும் பாட்டை "விரலுக்கேத்த வீக்கம்" படத்தில் காண்பித்தார். இவர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். இதையடுத்து 1990 ஆம் ஆண்டு வெளி வந்த "நீங்களும் ஹீரோதான்" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சேகர்.

இந்த படத்தில் சினிமா மோகத்தில் வீட்டையும் குடும்பத்தையும் கவனிக்காமல் சுற்றித் திரியும் இளைஞர்கள் பற்றிய கதையை சொன்னார். சினிமாவில் காட்டுவது போல் ஹீரோக்களும் வில்லன்களும் நிஜவாழ்வில் இருக்க மாட்டார்கள் என்பதை காட்டினார்.

இவர் இதுவரை 18 படங்களை இயக்கியுள்ளார். சின்னத்திரையிலும் பொறந்த வீடா புகுந்த வீடா என்ற சீரியலை இயக்கினார். இது சன் டிவியில் ஒளிபரப்பானது. கடைசியாக தனது மகன் காரல் மார்க்ஸை வைத்து சரவண பொய்கை எனும் படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

அண்மையில் கூட இவர் சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தார். அதில்,"விரலுக்கேத்த வீக்கம்" படத்தில் கனகாவை மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க வைத்தேன். காமெடியன் விவேக்கிற்கு ஜோடி என்றால், பட வாய்ப்புகள் தட்டி போகும் என அஞ்சினார். ஆனால் அவரை சமாதானம் செய்து நடிக்க வைக்க சம்மதம் பெற்றேன்" என வி.சேகர் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+