அனுபவம் இல்லாதவரிடம் நாட்டை கொடுக்காதீங்க.. பெரம்பூருக்கே போய் விஜய்யை அட்டாக் செய்த திவ்யா சத்யராஜ்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்த திவ்யா சத்யராஜ், "அனுபவமே இல்லாதவரிடம் நாட்டை கொடுக்காதீங்க என்று விஜய்யை விமர்சித்து" பேசினார். மேலும் உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் என்னால் உடனே உங்க வீட்டுக்கு வர முடியும். ஆனால் விஜய் அப்படி வரமாட்டார் என்றும் கூறியும் வாக்கு சேகரித்தார்.
தேர்தல் தேதி நெருங்க நெருங்க அரசியல் தலைவர்கள் நாலாபுறமும் சுற்று சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தான் விஜய் போட்டியிடுவதால் ஸ்டார் அந்தஸ்து பெற்ற பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை ஆதரித்து பிரசாரம் செய்த திவ்யா சத்யராஜ் இவ்வாறு பேசினார்.

பெரம்பூரில் திவ்யா சத்யராஜ் வாக்கு சேகரிப்பு
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ளது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க அரசியல் களம் அனல் பறக்கிறது. கோடைக்கால தகிக்கும் அனலை விட அரசியல் தலைவர்களின் பிரசார அனல் சூடு பறக்கிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் தங்களுக்கு உரிய பாணியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களுக்கு பரிட்சையமான நடிகர், நடிகைகளும் வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சியினரை திட்டி தீர்த்து வருகிறார்கள். நடிகர் பொன்னம்பலம், கஞ்சா கருப்பு, ராமராஜன் என பல நடிகர்களும் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் தான் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில் நடிகர் சத்யராஜின் மகளும் திமுக நிர்வாகியுமான திவ்யா சத்யராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விஜய்யை வர சொல்லுங்கள் பார்ப்போம்
அப்போது அவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். திவ்யா சத்யராஜ் கூறுகையில், அனுபவம் இல்லாத அரசியல்வாதியிடம் நாட்டை ஒப்படைப்பது நாட்டுக்கு ஆபத்தானது. எனக்கு யாருமே வேண்டாம்.. நான் பாட்டு வந்து உங்க வீட்டில் ஒரு கப் காஃபி சாப்பிட்டு விட்டு போவேன். ஆனால் விஜய் சார் அப்படியா.. அவரை வர சொல்லுங்கள் பார்க்கலாம்.
சத்யராஜ் பொண்ணு.. ரொம்ப ஆடம்பரமாக வளர்க்கப்பட்டு இருக்கலாம் என்று நீங்க நினைக்கலாம். ஆனால் நான் அப்படி இல்லை.. பென்ஸ் காருக்கும் டைமண்ட் நகைக்கும் அடிமையாக வளர்க்கப்படவில்லை. உங்களில் ஒருத்தி.. உங்களுக்கு வேலை செய்வதற்காக வந்திருக்கிறேன்.. என்னைக்குமே நான் உங்களோடு இருப்பேன்.. என்று தெருத் தெருவாக நோட்டீஸ் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெரம்பூர் கிழக்கு தொகுதி
பெரம்பூர் கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுகிறார் என்பதால் அந்த தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறியிருக்கிறது. ஏற்கனவே திமுக அங்கு சிட்டிங்க் எம்.எல்.ஏவான ஆர்.டி.சேகரே இந்த முறையும் திமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். கடந்த முறையும் அதிமுக வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இந்த முறை அதிமுக பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு ஒதுக்கியுள்ளது. இதில் பாமகவின் திலகபாமா களம் காண்கிறார். களம் இப்படி இருக்கையில் விஜய்யை வீழ்த்த திமுக வியூகம் வகுத்து வருகிறது. இதன்படி தான் ஏற்கனவே விஜய்யை சரமாரியாக விமர்சித்து வந்த திவ்யா சத்யராஜை பெரம்பூர் தொகுதியில் பிரசாரம் செய்ய வைத்து திமுக வியூகம் வகுத்து இருக்கிறது.
-
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது எதிரியா ஜோசப் விஜய் அவர்களே.. நயினார் கேள்வி -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி












Click it and Unblock the Notifications