பெங்களூர் டூ தூத்துக்குடிக்கு ஸ்பெஷல் ரயில்.. தீபாவளிக்கு ஊருக்கு போறவங்க நோட் பண்ணுங்க!
சென்னை: தீபாவளி பண்டிகையை மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த வகையில், பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கும் ஸ்பெஷல் டிரெயின் ஒன்றை ரயில்வே அறிவித்துள்ளது. பெங்களூரில் வசிக்கும் தமிழக தென் மாவட்ட மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8 ஆம் தேதி நாடு முழுக்க உற்சாகத்துடன் கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளியை கொண்டாட மக்களும் தயாராகி வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தங்கி வேலை செய்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட தயாராகுகின்றனர்.

பெங்களூர் டூ தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்
ஆனால் தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதாலும் கடைசி நேரத்தில் பஸ் மற்றும் ரயில்களில் டிக்கெட் கிடைக்காது என்பதலும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பினை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்தியன் ரயில்வே சார்பிலும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை அறிவிப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது பெங்களூர் கன்டோன்மென்டில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயிலை தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெங்களூரில் தமிழர்கள் அதிகம் பேர் வசித்து வருகிறார்கள். ஐடி நிறுவனங்களிலும் ஏராளமானோர் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் வசதிக்காக தற்போது தென் மேற்கு ரயில்வே இந்த சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
எப்போது இயக்கப்படும்?
பெங்களூர் கன்டோன்மென்ட் - தூத்துக்குடி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06533) வரும் நவம்பர் 6 ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.
இதே போன்று மறுமார்க்கத்தில், தூத்துக்குடி- பெங்களூர் கன்டோன்மென்ட் சிறப்பு ரயில் (06534) வரும் 7 ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு பெங்களூர் சென்றடையும்.
நின்று செல்லும் இடங்கள்
இந்த இரு சிறப்பு ரயிலும் ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். என்று கூறப்பட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
