இந்தி திணிப்பு.. நவ.4ல் களமிறங்கும் திமுக,திக.. ஒருபக்கம் பொதுக்கூட்டம், இன்னொரு பக்கம் ஆர்ப்பாட்டம்
சென்னை: திமுகவின் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் திக மாணவரணி சார்பாக ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
தொடர்ந்து இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக அக்.14ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுமட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை வலியுறுத்தி அக்.18ல் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் இந்தி திணிப்பு எதிராக திராவிடர் கழக மாணவரணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் என்று கி.வீரமணி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி எதிர்ப்பு என்பது இன்று நேற்று நடைபெறுவதல்ல. உண்மையைச் சொல்லப்போனால், வரலாற்று நெடுக நடைபெற்று வரும் ஆரிய - திராவிடப் போராட்டத்தின் உள்ளடக்கமான கூறு என்று இதனைக் கூற வேண்டும்.

இந்தி திணிப்பு
1937ல் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் இடையிடையே மத்திய அரசுகளின் இந்தி திணிப்பின் காரணமாகப் போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் கொடுத்த அறிக்கை மூலம் மீண்டும் இந்தி திணிப்பு வெளிப்பட்டுள்ளது.

விளைவு விபரீதமாகும்
இதனால், இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பல மாநிலங்களிலும், இந்தி எதிர்ப்பு எரிமலை நெருப்பைக் கக்க ஆரம்பித்துவிட்டது. இந்திக்கு எதிராக இந்தியா எங்கும் வெடித்துக் கிளம்பும் போக்கை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ளத் தவறினால், அதன் விளைவு விபரீதமாகி விடும். கடும் விலையைக் கொடுக்க நேரிடும். திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நவம்பர் 4ம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இந்தி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் அறவழிப் போராட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் திமுக, திக
ஏற்கனவே நவம்பர் 4ம் தேதி திமுக சார்பாக இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும், பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, கேஎன் நேரு உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் திராவிட இயக்கம் மற்றும் கட்சிகள் சார்பாக சார்பாக ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை பதிவு செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications