விஜயகாந்த் உடல்நிலையில் தொய்வு.. சிகிச்சை குறித்து உண்மையை சொன்ன பிரேமலதா!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பது உண்மை தான் என்று அக்கட்சியின் பொருளாளரும், மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஜூன் 14ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து நீரிழிவு பிரச்சினை காரணமாக விஜயகாந்தின் கால் விரல் அகற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது. இது தேமுதிமுக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமாவில் பறந்து பறந்து ஒற்றைக் காலால் வில்லன்களை விரட்டிய கேப்டன் விஜயகாந்த்திற்கா இந்த நிலைமை என்று சமூக வலைதளங்களில் சோகத்தை வெளிப்படுத்தினர். அதோடு, மீண்டும் பழைய விஜயகாந்தாக வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக பதிவிடப்பட்டது.
இது தொடர்பாக தேமுதிக தலைமை வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்னையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் நலமுடன் இருக்கிறார்.
மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து விஜயகாந்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜயகாந்தின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு, ஆதரவு கோருவதற்காக சென்னை வந்தார். அந்தக் கூட்டத்தில், அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகள் பங்கேற்றனர். சென்னை வந்த திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு பெண் வேட்பாளராக திரவுபதி முர்முவுக்கு பெண் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துக்கள் என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதாவிடம் விஜயகாந்த் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பது உண்மை தான். 10 நாட்களுக்கு ஒருமுறையோ மாதத்திற்கு ஒருமுறையோ மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் விஜயகாந்த்-ஐ தொடர்ந்து பரிசோதனைக்கு அழைத்து செல்கிறோம். அப்படி மருத்துவப் பரிசோதனைக்கு செல்வதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications