சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த ஒரு தொகுதிதான் பிரச்சனை.. மாறி மாறி சண்டை போடும் பாமக - தேமுதிக.. குழப்பத்தில் அதிமுக!

அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் ஒரே இடத்தை கேட்டு இருப்பதால் தொகுதிகள் பங்கிடுவதில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கூட்டணியில் தேமுதிக பெறப்போகும் தொகுதிகள் இவைதான்

    சென்னை: அதிமுக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் ஒரே இடத்தை கேட்டு இருப்பதால் தொகுதிகள் பங்கிடுவதில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.

    லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. வரும் ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் பல்வேறு மாநிலங்களில் தொடங்க உள்ளது.

    ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் எங்கு போட்டியிடும், அதிமுக எங்கு போட்டியிடும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

     ஜெயலலிதா இடத்தில் பியூஷ்கோயல்.. அதிமுக அலுவலகத்தில் நடு நாயகமாக அமர்ந்து பேச்சு.. தொண்டர்கள் ஷாக்! ஜெயலலிதா இடத்தில் பியூஷ்கோயல்.. அதிமுக அலுவலகத்தில் நடு நாயகமாக அமர்ந்து பேச்சு.. தொண்டர்கள் ஷாக்!

    அதிமுக பெரிய கூட்டணி

    அதிமுக பெரிய கூட்டணி

    தமிழகத்தில் அதிமுக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. லோக்சபா தேர்தலை அடுத்த முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக 7 இடங்கள், பாஜக 5 இடங்கள், தேமுதிக 4 இடங்கள், புதிய தமிழகம் 1 இடம், புதிய நீதிக்கட்சி கட்சி 1 இடம், என்.ஆர் காங்கிரஸ் 1 இடம், தமிழ் மாநில காங்கிரஸ் 1 இடம், 20 இடங்களில் அதிமுக போட்டியிட உள்ளது.

    நேற்று பேச்சுவார்த்தை

    நேற்று பேச்சுவார்த்தை

    இந்த கூட்டணி தொடர்பாக நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்று அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தியது. நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை 8 மணி வரை நடைபெற்றது. ஆனாலும் இந்த ஆலோசனையில் முக்கிய ஒரு விஷயம் காரணமாக உடன்பாடு ஏற்படவில்லை.

    [ ஒட்டு மொத்த நாடும் ஒற்றை விரலுடன்.. லோக்சபா தேர்தல் 2019 ]

    காரணம் என்ன

    காரணம் என்ன

    அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாமக - தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் நட்பாகாமல் இருக்கிறது. இரண்டு கட்சிகளும் எப்போதும் போல எலியும், பூனையுமாக கூட்டணியில் உள்ளது. முக்கியமாக தொகுதி பங்கீடு என்று வந்துவிட்டால் இரண்டு கட்சிகளும் ஏட்டிக்கு போட்டியான நிலைப்பாட்டில் உள்ளது.

    ஒரே தொகுதி கேட்கிறது

    ஒரே தொகுதி கேட்கிறது

    இந்த நிலையில் நேற்று அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இதே சண்டை நடந்து இருக்கிறது. தேமுதிக - பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே தொகுதியை கேட்டு உள்ளது. இரண்டு கட்சிகளும் கிருஷ்ணகிரி தொகுதியை கேட்டு உள்ளது. இதனால் அதிமுக தலைமை என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறது.

    நீடிக்கும் பிரச்சனை

    நீடிக்கும் பிரச்சனை

    அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 7 இடங்கள் கிடைத்தது, தங்களுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தது தேமுதிகவுக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி தொகுதியாவது தங்களுக்கு கிடைக்க வேண்டும். இதிலாவது அதிமுக தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தேமுதிக நினைக்கிறது. ஆனால் தாங்கள் வலுவாக இருக்கும் கிருஷ்ணகிரி தொகுதியை விட்டுக்கொடுக்க பாமக விரும்பவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    Reason for Delay: DMDK and PMK fights over the same constituency in AIADMK Alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X