உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?
சென்னை: திமுகவிடமிருந்து ஒரு ராஜ்யசபா சீட் பெற்றதை அடுத்து பிரேமலதா வீட்டில் களேபரம் நடந்துள்ள விவகாரம் தான் இதுவரை வெளிவராத ஹாட் டாபிக் ..
திமுக கூட்டணியில் இணைந்திருக்கும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கினார் ஸ்டாலின். அந்த சீட்டில் ராஜ்யசபா எம்.பி.யாக பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். எம்.பி.யாக சுதீஷ் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியிருக்கிறது. ஒருவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது அவரை 10 எம்.எல்.ஏ.க்கள் முன் மொழிய வேண்டும். ஆனால், தேமுதிகவிடம் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லையென்பதால் திமுக எம்.எல்.ஏ.க்கள் தான் முன் மொழிந்துள்ளனர். அந்த வகையில் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறது தேமுதிக.

ராஜ்யசபா சீட்டை ஒதுக்கினார் ஸ்டாலின்
தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுவதாக திமுக உறுதியளிக்கப்பட்டதை அடுத்து பிரேமலதாவை சந்தித்தனர் தேமுதிக சீனியர்கள் சிலர். அப்போது, திமுக ஒதுக்கியுள்ள இந்த ராஜ்யசபா சீட்டில் நீங்கள் எம்.பி. யாகி டெல்லிக்கு போக வேண்டும். சுதீஷ்சை சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட வைத்து அவரை எம்.எல்.ஏ. ஆக்கலாம். சட்டப்பேரவைக்கு அவர் செல்லட்டும். நீங்கள் டெல்லிக்குப் போக வேண்டும். உங்கள் கம்பீர குரல் பார்லி மென்டில் ஒலிக்க வேண்டும்.
உங்களின் நாடாளுமன்ற அரசியல் மூலம் தேமுதிகவை தேசிய அளவில் கொண்டு போக முடியும். பார்லிமென்ட் அரசியலில் பெண் எம்.பி.க்கள் தான் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறார்கள். அவர்களால்தான் சாதிக்க முடிகிறது. அதனால் நீங்கள் தான் டெல்லிக்கு செல்ல வேண்டும் என்று பிரேமலதாவிடம் கூறியிருக்கிறார்கள்.
டெல்லிக்கு செல்ல வேண்டும்
அதைக்கேட்டு, பிரேமலதாவுக்கு எம்.பி.யாக வேண்டுமென்கிற ஆசை உருவாகியிருக்கிறது. சீனியர்கள் சொல்வது லாஜிக்காக ஏற்கக் கூடியதாக இருக்கிறது என உணர்ந்த அவர், சுதீஷை தான் டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்பது நீண்டகால விருப்பம்; முடிவு. அந்த நினைப்பில் தான் சுதீஷ்சும் இருக்கிறார். இப்போது அவருக்கு இல்லை என சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாரோ? என்று கூற, நீங்கள் சொன்னால் ஏற்பார்? பேசிப் பாருங்கள் என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இதனை அடுத்து சுதீஷிடம் பேசியிருக்கிறார் பிரேமலதா. அதற்கேற்ப பிரேமலதாவின் மகன்களும் சில பாயிண்ட்டுகளுடன் பேசியுள்ளனர். இதனைக் கேட்டு ஏகத்துக்கும் டென்சனான சுதீஷ், பல ஆண்டுகளாக கட்சிக்கும் உங்களுக்கும் உழைத்திருக்கிறேன். ராஜ்யசபா சீட் கிடைத்தால் உனக்குத்தான் அது. டெல்லி பாலிட்டிக்ஸை நீதான் பார்த்துக் கொள்ளனும்னு அடிக்கடி சொன்னது நீங்கள் தான். அதைக் கேட்டு கேட்டு எனக்குள் டெல்லி அரசியலை வளர்த்துக்கொண்டேன்.
பிரேமலதாவுக்கு எம்.பி.யாக வேண்டுமென்கிற ஆசை
இப்போ, உனக்கு இல்லை ; அதை நானே எடுத்துக் கொள்கிறேன் என சொன்னால் எப்படி அக்கா? இதை உன்கிட்டேயிருந்து எதிர்பார்க்கலை. இது உங்க கட்சி. என்னவேனாலும் முடிவு எடுக்கலாம். தடுக்க நான் யார்? எனக்குன்னு சொல்லித்தான் திமுக விடமிருந்து இந்த சீட் வாங்கப்பட்டது. இப்போ நீங்கள் அதில் போட்டியிட்டால் திமுகவுக்கு என்ன பதில் சொல்வது? எனக்கு இல்லைன்னு முடிவாகிவிட்டால் கட்சி பொறுப்பிலிருந்தும் விலகி விடுகிறேன் என்று நிறைய பேசியிருக்கிறார் சுதீஷ்.
இதனால் பிரேமலதா வீட்டில் ஒரே களேபரமாக இருந்துள்ளது. இறுதியில், ஏற்கனவே முடிவு செய்தது போல, சுதீஷுக்கே சீட்டை ஒதுக்கித் தந்துவிட்டார் பிரேமலதா. தம்பி சுதீஷ் நிறைய பேசியதில் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார் பிரேமலதா. இருப்பினும் அந்த கோபத்தையெல்லாம் மறைத்துக் கொண்டு , சுதீஷ் மனுத்தாக்கல் செய்தபோது அவருடன் புறப்பட்டுச் சென்றார் பிரேமலதா என்கிறார்கள் தேமுதிகவினர்.
- சிறப்பு நிருபர் எழில்
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications