திமுகவில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. 7 பேர் மாற்றம்.. 64 பேர் ஒருமனதாக தேர்வு.. முழு பட்டியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கழக அமைப்பில் உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டள்ளனர்.

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. 72 கழக மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று திமுக சார்பில் 15வது பொதுத்தேர்தல் தொடர்பான பட்டியல் வெளியானது.

 பட்டியல் வெளியிட்ட துரைமுருகன்

பட்டியல் வெளியிட்ட துரைமுருகன்

அதன்படி திமுகவின் பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாநகர மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல் வெளியானது. கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி-நெல்லை-தென்காசி-விருதுநகர்

கன்னியாகுமரி-நெல்லை-தென்காசி-விருதுநகர்

அதன்படி கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் செயலாளராக அமைச்சர் மனோ தங்கராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக ரெ மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கீதாஜீவன், தென்காசி மேற்கு மாடவ்ட செயலாளராக சிவபத்மநாதன், திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராக அப்துல் வஹாப், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளராக ஆவுடையப்பன், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளராக கேகே எஸஅஎஸஅஆர் ராமச்சந்திரன், விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளராக தங்கம் தென்னரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 சிவகங்கை -ராமநாதபுரம்-மதுரை

சிவகங்கை -ராமநாதபுரம்-மதுரை

சிவகங்கை மாவட்ட செயலாளராக கேஆர் பெரியகருப்பன், இராமநாதபுரம் மாவட்ட செயலாளராக காதர்பாட்சா முத்துராமலிங்கம், தேனி தெற்கு மாவட்ட செயலாளராக ராமகிருஷ்ணன், தேனி வடக்கு மாவட்ட செயலாளராக தங்க தமிழ்செல்வன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக செந்தில்குமார், மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக கோ தளபதி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக மு மணிமாறன், மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக மூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவை-கிருஷ்ணகிரி -திருப்பூர்-தருமபுரி

கோவை-கிருஷ்ணகிரி -திருப்பூர்-தருமபுரி

நீலகிரி மாடவ்ட செயலாளராக முபாரக், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக க முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக என் நல்லசிவம், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக பத்மநாபன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளராக செல்வராஜ், கோவை மாநகர் மாவட்ட செயலாளராக நா கார்த்திக், கோவை தெற்கு மாவட்ட செயலாளராக தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட செயலாளராக தொ.அ. ரவி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக ஒய் பிரகாஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரா மதியழகன், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக பெ பழனியப்பன், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளார ்தடங்கம் பெ சுப்பிரமணி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல்-கரூர்-சேலம்

நாமக்கல்-கரூர்-சேலம்

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக மதுரை செந்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக கேஆர்என் ராஜேஷ்குமார், சேலம் மத்திய மாவட்ட செயலாளாராக ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக டிஎம் செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக எஸ்ஆர் சிவலிங்கம், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளராக செல்வபாண்டியன், கரூர் மாவட்ட செயலாளாரா வி செந்தில்பாலாஜி, அரியலூர் மாவட்ட செயலாளாராக சா சி சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட செயலாளராக சி ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 திருச்சி-தஞ்சை-கடலூர்-கள்ளக்குறிச்சி

திருச்சி-தஞ்சை-கடலூர்-கள்ளக்குறிச்சி

திருச்சி மத்தி மாவட்ட செயலாளராக வைரமணி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளராக தியாகராஜன், திருவாரூர் மாவட்ட செயலாளராக கலைவாணன், நாகை தெற்கு மாவட்ட செயலாளராக கவுதமன், நாகை வடக்கு மாவட்ட செயலாளராக நிவேதா எம் முருகன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளாரக அண்ணாதுரை, தஞ்சை மத்திய மாவட்ட செயலாளாரா துரை சந்திரசேகரன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக கல்யாண சுந்தரம், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளாராக கணேசன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளாரா கஎம்ஆர்கே பன்னீர் செல்வம், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளராக வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளராக தா உதயசூரியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்-காஞ்சி-வேலூர்-திருவள்ளூர்

விழுப்புரம்-காஞ்சி-வேலூர்-திருவள்ளூர்

விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக நா புகழேந்தி, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளாரக செஞ்சி கேஎஸ் மஸ்தான், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளாரக அமைச்சர் எவ வேலு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக எம்எஸ் தரணி வேந்தன், வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட செயலாளாராக தேவராஜி, வேலூர் மத்திய மாவட்ட செயலாளாராக நந்தகுமார், வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை) மாவட்ட செயலாளாரக ஆர் காந்தி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளாராக சுந்தர், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளராக தாமோ அன்பரசன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக எஸ் சந்திரன், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக அமைச்சர் சா மு நாசர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக டிஜே கோவிந்தராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட செயலாளர்கள்

சென்னை மாவட்ட செயலாளர்கள்

சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளராக மயிலை த வேலு, சென்னை மேற்கு மாவட்ட செயலாளாராக நே சிற்றரசு, சென்னை கிழக்கு மாட்ட செயலாளராக பிகே சேகர்பாபு, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளாராக மாதவரம் எஸ் சுதர்சனம், சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக தா இளங்கோ என்ற இளைய அருணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றம் செய்த இடங்கள்

மாற்றம் செய்த இடங்கள்

இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த மூர்த்திக்கு பதில் செந்தில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் மதியழகன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வரதராஜனுக்கு பதில் தளபதி முருகேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த ராமச்சந்திரனுக்கு பதில் ரவி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த பூபதிக்கு பதில் சந்திரன், தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்த இன்பசேகரனுக்கு பதில் அமமுகவிலிருந்து வந்த பழனியப்பன், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த ஏனாதி பாலசுப்பிரமணியத்திற்கு பதில் அண்ணாதுரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி வடக்கு மாவட்டம் பெண்டிங்

தென்காசி வடக்கு மாவட்டம் பெண்டிங்

தேர்தல் நடத்தாமலேயே திமுக எம்பி தனுஷ் குமாரை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டி தென்காசி வடக்கு மாவட்டத்தின் தற்போதைய பொறுப்பாளர் செல்லதுரையின் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் தொடர்ந்த குழப்பம் உள்ளது. இதனால் இந்த மாவட்டத்துக்கு மட்டும் மாவட்ட செயலாளர் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமைப்பு செயலாளர் நியமனம்

அமைப்பு செயலாளர் நியமனம்

மேலும் திமுகவின் புதிய அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்த ஆர்எஸ் பாரதி, திமுக செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+