சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திப்போம்.. தேர்தலுக்காக ஸ்டாலின் அதிரடி பிளான்!

உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க போவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தலுக்காக ஸ்டாலின் உருவாக்கிய ஸ்பெஷல் முழக்கம்- வீடியோ

    சென்னை: உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். திமுக கூட்டணி குறித்தும், தேர்தல் திட்டங்கள் குறித்தும் இதில் ஆலோசனை நடத்தினார்கள். கூட்டத்திற்கு பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

    ஸ்டாலின் தனது பேட்டியில், இன்று மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடளுமன்ற உறுப்பினர்கள், நாடளுமன்றத்திற்கு அமைக்கப்பட்டு இருக்கும் பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். பல விஷயங்கள் குறித்து இதில் பேசினோம்.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    தேர்தலுக்காக பூத் கமிட்டி சரியாக அமைக்கப்பட்டு இருக்கிறதா என்று பேசினோம். இதற்காக 12 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளோம். 40 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏற்கனவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் திமுக சார்பில் 12,617 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டத்தை கூட்டி, அந்த கூட்டம் நடக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

    தேர்தல் முழக்கம்

    தேர்தல் முழக்கம்

    இதற்காக ஜனவரி 3 முதல் கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களை சந்திக்க உள்ளோம். கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க போகிறோம். இதற்காக புதிய முழக்கத்தை தேர்வு செய்துள்ளோம். மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்று முழுக்கத்தை உருவாக்கி உள்ளோம்.

    பாஜக கூட்டணி

    பாஜக கூட்டணி

    கிராமம் முழுக்க மக்களை சென்று சந்திக்க போகிறோம். பிரதமர் மோடி அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக செய்திகள் வருகிறது. அது கொள்கை கூட்டணியா, கொள்ளை கூட்டணியா என்று யோசிக்க வேண்டும். ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை இணைத்து வைத்ததே மோடிதான்.

    இன்னொரு அணி

    இன்னொரு அணி

    ராகுலை நான் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததில் தவறில்லை, திமுகவின் உணர்வை நான் வெளிப்படுத்தினேன். இதில் யாருக்கும் கோபம் இல்லை. மூன்றாவது அணி உருவானால் பார்த்துக் கொள்ளலாம், என்று கூறியுள்ளார்.

    English summary
    DMK chief MK Stalin reveals his master plan for the upcoming elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X